பக்கம்:உதட்டில் உதடு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயிற்றங்காய் தன்னைப்

பறிக்காதே, பெருக்கட்டும்.

வயலூரு சந்தையிலே

வாங்கிவந்த வெற்றிலையை,

ஈரத்துணி சுற்றி எடுத்துவை '’
என்று சொன்னுள்,

ஊருக்கே பேரழகி

உடனே அதைச்செய்தாள்.

அங்காடி விற்றுவரும்

மங்கம்மா மறுபடியும்

சங்கீதம் பாடுகின்ற .

பெண்வண்டு முகம்நோக்கி,

”ஏடுவிட்டுக் கொண்டிருக்கும்
இளவாழைக் கன்றுக்குப்
பாடுபட்டுக் கண்ணிர்

பாய்ச்சி வளர்த்துள்ளோம்.

வேலி, வெகு மோசம்.

ஆடெல்லாம் ஊசிக்குள்
நூலுபோலே புகுந்து

தின்றுவிடும், பார்த்துக்கொள்.
வயல்துழையும் காவிரியே,

வளர்ந்துவரும் நெல்குருத்தே !
தயிர்க்காரி இங்குவந்தால்

சில்லரையைக் கொடு”-என்று

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/11&oldid=1067162" இலிருந்து மீள்விக்கப்பட்டது