பக்கம்:உதட்டில் உதடு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

* முத்துச் சிரிப்புதனை,
மூடிவைக்கும் என்உதட்டைக்
கொத்துங்கள் அத்தான், வாய்க்
கோவைப் பழத்தாலே’

என்று நான்-சொல்லி,
இதழ்கள், புதுத்தோள்கள்
கன்னங்கள் கற்கண்டு
முத்தம் கொடுப்பதெந்நாள் ?”

என்றுஅடுக் கடுக்காய்
எண்ணமிட்டு கண்ணம்மா
நின்றுகொண் டேயிருந்தாள்.
நிற்கும் மரத்தருகில்,

அந்தச் சமயத்தில்
ஆருடம் சொல்லுபவன்
அந்த வழியாக
வருவதைத் தான்பார்த்து

செங்கரும்பு போல்இனிக்கும்
சொல்லாலும், கையாலும்
‘ இங்கேவா ? என்றழைத்தாள்
எட்டிப்பழ நிறத்தாள்.
கொட்டுகின்ற தேளின்
கொடுக்குமீசையை முறுக்கி
விட்டுக்கொண்டே வந்தான்,
வேல்விழியாள் வீட்டுக்கு.

வண்ண மலரழகி
வந்தவனிடம் வந்து,
"என்கையைப் பார்த்துச்சொல்”
என்றுசொல்லி உட்கார்ந்தாள்.

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/15&oldid=1067188" இலிருந்து மீள்விக்கப்பட்டது