பக்கம்:உதட்டில் உதடு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாய்ஒன்று அவனைப் பார்த்து
குரைத்தது; ஒடிக் கொண்டான்.
காய்க்காத மாம ரத்தின்
காலடி தன்னில், குந்தி
வாய்ப்பாட்டு பாடிக் கொண்டே
முண்டாசு கட்டிக் கொண்டான்.

அதிரசம் தனை எடுத்தான்.
அதில்அவள் உருவம் தோன்ற,
‘புதிதாகப் பார்க்கும் உந்தன்
பார்வைதான் இனிப்பா ? இல்லை,
மெதுவான பேச்சா? முத்தம்
வளர்க்கின்ற உதடா ?’ என்று
மதிதடு மாற்றத் தோடு
மார்பிலே அணைத்துக் கொண்டான் !

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/19&oldid=1067528" இலிருந்து மீள்விக்கப்பட்டது