பக்கம்:உதட்டில் உதடு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கையின் முகம் போலே வெண்ணிலா - ஒரு
மாதம் உயிரோ டிருக்கும் வெண்ணிலா
தங்க கிறம் ஆகும் வெண்ணிலா - செந்
தாமரை யின் விரோதி வெண்ணிலா.

தண்ணிரில் முகம் பார்க்கும் வெண்ணிலா - வானைத்
தடவி சுகம் பார்க்கும்
மின்னத் தெரியாத வெண்ணிலா - உச்சி
மலைக்கு முத்தம் கொடுக்கும் வெண்ணிலா”

என்று பாடிக் கொண்டே போகையில்
மலையில் நிலவு மறைந்தது-அவனது
உதட்டுப் பாட்டும் உப்புபோல் கரைந்தது !

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/31&oldid=1067655" இலிருந்து மீள்விக்கப்பட்டது