பக்கம்:உதட்டில் உதடு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டே இருக்கும் குடும்பப் பெண்கள்,
வயது பெருகிய மங்கையர்; அனைவரும்
மாட்டுச் சலங்கையை ஆட்டுதல் போல
பேசிக் கொண்டே பாத்திரம் துலக்கினர்.
சிலர்,
ஏசிக் கொண்டே பல்லேத் தலக்கினர்.

இவனும் இவர்களும் இவையும் இப்படி
இருந்து கொண்டே இருக்கும் போது ;

புதிய ரோஜாப் பூவைக் கூந்தலில்
பதிய வைத்து, பிறைநிலா நெற்றியில்
பொட்டின் வடிவை வட்டமாய்க் காட்டி,
இடுப்பில் குடத்தை எடுத்துச் சேர்த்து
அதற்கு இடதுகை ஆதரவு தந்து,
துதிக்கை போல வலதுகை வீசி
குளக்கரை நோக்கி கமலா என்பவள்
வந்தாள் ; அன்ன்ம் வருவது போல
வந்தாள். அப்படி வருகின்ற போதே
இடையும் வளைந்தது!குடமும் அசைந்தது!

தங்க நிறத்து அங்கப் பகுதிகள்
கிழக்கு வெய்யிலில் வழக்கம்போல் மின்னின !
பெண்ணின் உதடும், கண்ணும், முகமும்,
பழமும், கடலும், நிலவும் ஆயின
பாத்திரம் துலக்கும் பெண்களில் ஒருத்தி,
கமலா வருவதைக் கண்டாள், சொன்னாள்.
அவளைக் குறித்து சிவகாமி என்பவள்
தொடர்கதை சொல்லத் தொடங்கிவிட்டாள்

சொல்லும் கதையை, எல்லோரும் கேட் கையில்
தங்கம் என்ற தையல் தும்மினாள்.

38.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/40&oldid=1069159" இலிருந்து மீள்விக்கப்பட்டது