பக்கம்:உதட்டில் உதடு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




முகவுரை

சுரதா அழைக்கிறார்!

“என்னய்யா, இது காவேரிபோல கொதித்தெழாமல், சும்மா சஞ்சாவூர் பொம்மையாய் இருக்கிறயே” என்று தஞ்சாவூர் வாசியோ, அல்லது அதை அடுத்த தெற்குப்புற வாசியோ கூறுவான்.

“என்னேயா, இது ரேஸிலே கோட்டை விட்டாப்பலே குந்திக்கிட்டிருக்கியே!” என்பான் மதராஸ் மண்ணிலே பிறந்தவன்.

ஒருவனுடைய சலனமற்ற தன்மையை உரை வார்த்தையால் கூறுகிறபொழுது இப்படித்தான் சொல்ல முடியும். 'இழுத்தல்' என்ற வார்த்தை 'இசுத்தல்’ என்று திரிந்து உலாவுவதைப் போலே முன்னேயவனும், இன்றைக்குப் பிந்தியவனும் சலனமற்ற தன்மையை எப்படிக் கூறியிருப்பானே, கூறலாமோ-தெரியாது.

வார்த்தையிலே இழுத்துக் கட்டும் எண்ணங்கள் நேர்முகமாக எதிருக்கெதிராக எதாவதொரு எழுட்சியை உண்டுபண்ண முடியுமே தவிர, எதிர்கால நீண்ட இலக்கிய வெள்ளத்தில் நீந்தி, என்றைக்கும் எதிரொலிக்க முடியாது.

ஆனால்-

கவிதைச் சிமிழுக்குள் பூட்டி யனுப்புகிற வார்த்தைகள், ஒரு கட்டுக் கோப்புக்குள்ளே என்றைக்கும் நீக்கிப் பறக்கிற 'இறவாக் தன்மை'யைப் பெற்று விடுகிறது.

அதனால்தான்-

“ஏயா இதுவென் கோல் ! ழனைத் துபோரா
தெழுதோ வியமா யினையே !”


எனப் பகர்ந்த வில்லிப்புத்தூரான் காலக் குறுக்குப் பாய்ச்சலுக் கெல்லாம் ஈடு கொடுத்துவிட்டு, இன்றும் புதுமையாக உலவுகிறான். மதராஸ்காரன் சொன்ன ரேஸ் ஆட்டமும், தஞ்சைக்காரன் மொழிந்த தஞ்சாவூர் பொம்மையும் இன்றைய மனிதனின் மனத்தைச் சொல்லலாம். ஆனால் என்றைய மனிதனின் மனத்தைச் சொல்வதற்கு அவை வலுப்பெறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/5&oldid=1064157" இலிருந்து மீள்விக்கப்பட்டது