பக்கம்:உதட்டில் உதடு.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சொல்ல, கவிதை - அடி , கவிஞன் வேண்டும். தமிழுக்கு வில்லனை-அப்படியொரு பாத்திரத்தை-தந்த ராமாயணத்தை உரை நடையிலே. கம்பன் எழுதியிருப்பானேயானால் ‘ராவணன்’ என்ற செருக்கான ஒரு பாத்திரம் முழு உருவத்துடன் நமக்குக் கிடைத்திருக்க முடியாது. அவனுக்கு அடுத்து வந்த புலவர்கள், உரைநடையிலே ராவணன் குந்தியிருந்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை அரித்துச் சாப்பிட்டு நமக்கு ஒரு மூளி ராவணனைக் கொடுத்துவிட்டுப் போயிருப்பார்கள்.

அது மட்டுமல்ல. பண்டைய நாகரிகங்களின் பட்டயக் கல்லாக, மனித சமுதாய நிழலில் விழுந்த பண்புகளின் பாசறையாகக் கவிதை, சங்கம் முழங்கி வருகிறது.

அழகை உடம்பிலும், அன்பை செஞ்சிலும் சேர்த்து, கன்னியாகுமரியிலே மாம்பழச் சாற்றை எடுத்து, இருக்கும் வெளிச்சத்தை ‘இச்’சென்ற சத்தத்தால் அணைத்து ‘உதட்டில் உதடு’ என்று இளமைக்கு ‘ஆளுகை’தந்து ஆர்ப்பளிக்கிறார் கவிஞர் சுரதா.

வில்லிப்புத்துாரானின் நிழல்கீற்றாக இருந்து கவிஞர் சுரதா, உதட்டிலே உதடு சேர்ப்பதால், எச்சில் முத்தம் கொடுப்பதாலேயே இருட்டுக்குச் சேலை தருவது இனிப்பாய் இனிக்கிறது. அவர் உரை நடையிலே இருட்டுக்குச் சேலை தந்திருந்தால், அது தரும் சத்தம் சுவைச் சத்தாக இருக்காது. காமன் களிநடனம் புரியும் பிரகிருதி வாதமாகத்தான் இருக்கிருக்க முடியும்.

காலக் காவேரியின் சுழிப்பு எல்லைகளைப் பந்தமாக வைத்துச்சுழற்றி, நீரும் நெருப்பும் கொள்ளாத கவிதை எட்டிலே பூட்டியிருக்கும் சுரதா, எழுத்தாளனைப் போல ‘வாழுங் காலத்து’ப் புழுவல்ல. எதிரிக்குச் சதிராடி ஏற்றம் புரியும் அவர் ‘எக்காலத்தும்’ வாழும் உரிமை பெற்றவராகி விடுகிறார் இக்கவிதைத் தொகுப்பின் மூலம்.

கவிஞர் சுரதாவால், கலாவாணி -

புலமைக்கு அழைப்புத் தத்தாள்-புரட்சி
புதுமைக்குப் பட்டம் தந்தாள்.

சென்னை,

—1—1953. வாசவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/6&oldid=1065171" இலிருந்து மீள்விக்கப்பட்டது