பக்கம்:உதட்டில் உதடு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உதட்டில் உதடு


தொங்கும் சூரியன் தொலைந்து,வீடு
எங்கும் விளக்கு எரியும் நேரம்,

கூவும் கோழியின் கழுத்து போன்ற
அரிவாள் மணையில் கறிகாய் தன்னை
அரிந்து கொண்டு இருந்தாள் அஞ்சலை.

அஞ்கலை, நிலக்கரி நிறந்தான் ; ஆயினும்,
உடலின் அமைப்பு; உளியின் உதவியால்
கட்டிப் பாறையில் வெட்டிய சிலேதான் !

அவளது புருஷன் அஞ்சான் என்பவன்,
புளியங் கொட்டை போன்ற கண்கள்
உள்ள ஆட்டை ஒட்டிக் கொண்டு
வந்தான் வீடு. வந்தான் அவளிடம்,

நின்ற வினுக்குறி படுத்தது போல
இருக்கும் மீசையை இடது கையால்
முறுக்கிக் கொண்டே மனைவியைப் பார்த்து,
"நறுக்கிய மாம்பழச் சாறே! கேட்பாய்,
கன்னியா குமரி சென்று ; அங்கே,
பள்ளக் கடலில் பதுங்கி இருக்கும்
முத்துக் குளிக்க சித்தங் கொண்டேன்.

5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/7&oldid=1067150" இலிருந்து மீள்விக்கப்பட்டது