பக்கம்:உதயம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உதயம்

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்

வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்

ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் -

இரிங்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை 

வாட்டிய வரிசில வானவர் ஏறே

மாமுனி வேள்வியைக் காத்தவ பிரதம் 

ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் அரசே

அரங்கத்தம் மா! பள்ளி எழுந்தரு ளாயே.                     4

புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்

போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி 

கலந்தது குணதிசைக் கணகடல் அரவம்

களிவண்டு மிமுற்றிய கலம்பகம் புனைந்த 

அலங்கலங் தொடையல்கொண் டடியிணை பணிவான்

அமரர்கள் புகுந்தனர். ஆதலில் அம்மா 

இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்

எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே.                     5

இரவியர் மணிநெடுங் தேரொடும் இவரோ ?

இறையவர் பதிைெரு விடையரும் இவரோ? 

மருவிய மயிலினன் அறுமுகன் இவனே ?

மருத்தரும் வசுக்களும் வந்துவங் தீண்டி 

புரவியொ டாடலும் பாடலும் தேரும்

குமரதண் டம்புகுந் திண்டிய வெள்ளம் 

அருவரை அனையரின் கோயில்முன் இவரோ ?

அரங்கத்தம் மா! பள்ளி எழுந்தரு ளாயே.                   6

அந்தரத் தமரர்கள் கூட்டங்கள் இவையோ?

அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ? 

இந்திரன் ஆனையும் தானும்வந் திவனே ?

எம்பெரு மான் உன கோயிலின் வாசல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/10&oldid=1198103" இலிருந்து மீள்விக்கப்பட்டது