பக்கம்:உதயம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருவெம்பாவை

23

அண்ணு மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணுேர் முடயின் மணித்தொகைவீ றற்ருற்போல் 

கண்ணுர் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணுர் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் 

பெண்ணுகி ஆணுய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணுகி மண்ணுகி இத்தனையும் வேறகிக் 

கண்ணுர் அமுதமுமாய் நின்றன் கழல்பாடிப் (வாய்.

பெண்ணேயிப் பூம்புனல்பாய்க் தாடேலோ ரெம்பா

உங்கையிற் பிள்ளே உனக்கே அடைக்கலமென்று

அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்

எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றென்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் ஈரும் இணையடிகள்

போற்றிமால் நான்முகனும் காணுத புண்டரிகம்

போற்றியாம் உய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்

பேரற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். 20
                 
              ————————————
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/25&oldid=1200525" இலிருந்து மீள்விக்கப்பட்டது