பக்கம்:உதயம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருப்பாவை

27

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றுர் திறலழியச் சென்று செருச்செய்யும் 

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே

புற்றர வல்குற் புனமயிலே போதராய் 

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச்

சிற்றதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.              11

கனத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர 

நனேத்தில்லம் சேறக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலே வீழநின் வாசற் கடைபற்றிச் 

சினத்தினுல் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கிளியானேப் பாடவும்நீ வாய்திறவாய் 

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனேத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.           12

புள்ளின்வாய் கீண்டானேப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானேக் கீர்த்திமை பாடிப்போய்ப் 

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று 

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினுய்

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே 

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னுளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.                  13

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் 

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/29&oldid=1201805" இலிருந்து மீள்விக்கப்பட்டது