பக்கம்:உதயம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உதயம்

எங்களே முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணுதாய் 

நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏங்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணுனைப் பாடேலோ ரெம்பாவாய்.             14

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் 

வல்லேஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்

வல்லிர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக 

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார்போங் தெண்ணிக் 

வல்லானே கொன்ருனே மாற்றரை மாற்றழிக்க (கொள்

வல்லானே மாயனப் பாடேலோ ரெம்பாவாய்.                15

நாயகனய் நின்ற கந்தகோபனுடைய

கோயில்காப்பானே கொடித்தோன்றும் தோரண 

வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை 

மாயன் மணிவண்ணன் கென்னலே வாய்நேர்ந்தான்

துாயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் 

வாயால் முன்னமுன்னம் மாற்ரறதே அம்மாநீ

நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.                16

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் 

கொம்பனுர்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம்பெரு மாட்டி யசோகாய் அறிவுறய் .

அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய் 

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் யுேம் உறங்கேலோ ரெம்பாவாய்.                17
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/30&oldid=1201822" இலிருந்து மீள்விக்கப்பட்டது