பக்கம்:உதயம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருப்பாவை

31

ஒருத்தி மகனுய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனுய் ஒளித்து வளரத் 

தரிக்கிலா கிைத்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் 

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னே

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் 

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.             25

மாலே மணிவண்ணு மார்கழிநீ ராடுவான்

மேலேயார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே 

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சரலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே 

கோல விளக்கே கொடியே விதானமே

ஆவின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்.             26 .

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்

 பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினுல் நன்றக

குடகமே தோள்வளேயே தோடே செவிப்பூவே 

பாடகமே என்றினேய பல்கலனும் யாம்அணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு 

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்க்தேலோ ரெம்பாவாய். 27

கறவைகள் பின்சென்று காணம்சேர்க் துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்துஉன் தன்னைப் 

பிறவி பெறுந்தனே புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்றும் இல்லாத கோவிந்த உன்தன்னேடு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/33&oldid=1201842" இலிருந்து மீள்விக்கப்பட்டது