பக்கம்:உதயம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி

5

பப்பற வீட்டிருந் துணரும்நின் னடியார்

 பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்

 வணங்குகின் ருரணங் கின்மண வாளா 

செப்புறு கமலங்கள் மலருக்தண் வயல்சூழ்

 திருப்பெருங் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
 எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.                      6

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

 அரிதென எளிதென அமரரும் அறியார்

இதுவவன் திருவுரு இவனவன் எனவே

 எங்களே ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் 

மதுவளர் பொழில்திரு உத்தர கோச

 மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்ன

எதுவெமைப் பணிகொளு மாறது கேட்போம்

 எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.                        7

முந்திய முதல்நடு இறுதியும் ஆனுய்

 மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் 

பந்தனை விரலியும் யுேம்கின் அடியார்

பழங்குடில் தொறுமெழுந் தருளிய பரனே

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்

திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி 

அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்

ஆரமு தேபள்ளி, எழுந்தரு ளாயே                              8.

விண்ணகத் தேவரும் கண்ணவு மாட்டா .

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/7&oldid=1196292" இலிருந்து மீள்விக்கப்பட்டது