பக்கம்:உதயம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருமால் திருப்பள்ளியெழுச்சி
(தொண்டரடிப்பொடியாழ்வார் அருவியது)

கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணேந்தான்

கணையிருள் அகன்றது காலேயம் பொழுதாய் 

மதுவிரிங் தொழுகின மாமலர் எல்லாம்

வானவர் அரசர்கள் வந்துவங் திண்டி 

எதிர்திசை கிறைந்தனர் இவரொடும் புகுந்த 1

இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலைகடல் போன்றுள தெங்கும்

அரங்கத்தம் மா! பள்ளி எழுந்தரு ளாயே.

கொழுங்கொடி முல்லேயின் கொழுமலர் அணவிக்

கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ

எழுந்தன மலரணேப் பள்ளிகொள் அன்னம்

ஈன்பனி கனேந்ததம் இருஞ்சிற குதறி 

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்

வெள்ளயி றுறஅதன் விடத்தினுக் கனுங்கி                  2

அழுங்கிய ஆனேயின் அருந்துயர் கெடுத்த

அரங்கத்தம் மா! பள்ளி எழுந்தரு ளாயே,

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்

துன்னிய தாரகை மின்னெளி சுருங்கி

படரொளி பசுத்தனன் பனிமதி இவனே

பாயிருள் அகன்றது பைம்பொழிற் கமுகின்

மடலிடைக் றிேவண் பாளைகள் நாற

வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ

அடலொளி திகழ்தரு திகிரியக் கடக்கை

அரங்கத்தம் மா! பள்ளி எழுந்தரு ளாயே.                     3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/9&oldid=1198084" இலிருந்து மீள்விக்கப்பட்டது