பக்கம்:உத்தரகாண்டம்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    133


“இவனுவ வண்டவாளங்களை எடுத்துவிட்டால், பள்ளுப் பறைன்னு ஒதுக்கி வச்சிருக்கிற குடிசைக் குப்பை மேட்டு நாத்தமும் அழுகலும் பரிசுத்தம்னு தோணும். மரியாதையாப் போய்க்கோ?” அந்தம்மா வெலவெலத்து ஒட்டிக் கொண்டாள், சுவரோடு. அவள் அங்கு இருந்தபோது தான் அந்தக் கூடத்தில் பெரிய காந்தி படம், நேரு படம், சுபாஷ் சந்திரபோஸ் படம், எல்லாம் கொண்டு வந்து மாட்டினார்கள். அம்மா மஞ்சள் கதர்ப்புடவை உடுத்திக் கொண்டு, அவளையும் கமலியையும் அழைத்துக் கொண்டு, தெருவில் சென்றால், யாரும் பார்க்க மாட்டார்கள். கதவை அடைத்துக் கொண்டு உள்ளே போவார்கள். தெருக் கோடியில் பெருமாள் கோயில் இருந்தது. அம்மா எந்தக் கோயிலுக்குள்ளும் போனதில்லை. ஒருநாள் கதர்சட்டை அணிந்த சுந்தரம், பிச்சமுத்து, தங்கவேலு எல்லாரும் வந்தார்கள்... எல்லாரும், அம்மா, அவள், கமலி தெருவில் மகாத்மா காந்திக்கு ஜே! வந்தே மாதரம், சுபாஷ் சந்திரபோஸுக்கு ஜே...” என்று கத்திக் கொண்டு போனார்கள். மருதமுத்துதான் பெருங்குரலில் கத்துவான். இவர்கள் ஜே சொல்வார்கள். ஆனால் தெருவில் ஒரு குஞ்சு குழந்தைகூட இல்லை. திருச்சிபோகும் ரயில்பாதை. அதைக் கடந்தால் அங்கே தாலுகா கச்சேரி இருந்தது... ஒருகூரை பிராமணாள் காபி கிளப் இருந்தது. இவர்கள் தாலுகா கச்சேரிக்கு முன் கத்தினார்கள். பக்கத்தில் தான் கமலி படித்த பள்ளிக்கூடம். அன்று பள்ளிக் கூடம் இல்லை.

டவாலி போட்ட சேவகன் வந்து விரட்டினான். ஒரு போலீசுக்காரர் வந்தார்.

“எல்லாம் போயிடுங்கம்மா, ஏ புள்ள முழிய நோண்டிடுவேன்” என்று அவளைப் பார்த்துப் போலீசுக்காரன் சாடையாகப் பயமுறுத்தினான். அவள் அம்மாவின் பக்கம் ஒட்டிக் கொண்டாள். மருதமுத்துவையும் சுந்தரத்தையும் விலங்கு கொண்டு வந்து பூட்டி அழைத்துச் சென்றார்கள். இவர்கள் மறுபடியும் கத்திக் கொண்டே வீடு திரும்பினார்கள். அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/135&oldid=1049824" இலிருந்து மீள்விக்கப்பட்டது