பக்கம்:உத்தரகாண்டம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    17


குப்பைகள் மேலே மேலே சேர்ந்தால், அடங்காத துர்நாற்றத்தில் ஆவியடிப்பதுபோல் இருக்கிறது.

“அம்மா, இப்படி, முன்னும் இல்லாமல், பின்னும் இல்லாமல் நீ எதற்காக இந்த வீட்டைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்கணும்? எஸ்.கே.ஆர். இருந்த வரை சரி. அவர் போய் பதினாறு வருசமாயிடிச்சி. வாரிசுன்னு யாரும் இல்லை. இது டிரஸ்ட்டைச் சேந்தது. அந்தப் பரசுராமன் நீ கட்டிக் காக்குறதாக நினைக்கும் இலட்சியத்தை என்னிக்கோ குழிதோண்டிப் புதைச்சிட்டான். உன்னை ஒருநாள், வேலைக்கார நாயே, வூடு சொந்தம்னு நினைக்காதே, வெளியே எறங்குன்னு சொல்லு முன்ன, நீ முடிவெடுக்கணும்!”

அவள் ஒருகணம் திகைக்கிறாள். அவன் சொல்வானோ, சொல்லமாட்டானோ, இவன் சொல்கிறான்.

நெஞ்சு கொதிக்கிறது.

“தாயம்மா, நீ தகுந்த பேர வச்சிட்டு, இங்கே ஏழைப் பெண்கள் தொழிற் கூடம் எதானும் வைக்கணும். நான் உயிலில் எழுதி இருக்கிறேன். கடைசி வரையிலும் நீதான் இருந்து கவனிக்கணும்... ராதாம்மா பேரை வைத்து நடத்தணும். எங்கெங்கோ பெண் குழந்தைகளைக் கொல்லுறாங்களாம். அந்த அவநம்பிக்கையைக் கிள்ளி எறியணும்...”

அவருடைய சொற்கள் ஒலிக்கின்றன.

அப்போது பெரிய டிஃபன் காரியருடன், ரங்கன் அய்யாவுக்குச் சாப்பாடு கொண்டு வருகிறான்.

“கிருஷ்ணா ஹோட்டல் முதலாளி ஐயாவைப் பார்க்க வரேன்னாருங்க...” ரங்கன் குழைந்து நிற்கிறான். இவன் போய்ச் சொல்லி இருப்பான். சாராய, லாட்ஜ் சாம்ராச்சியம் என்பது தெரியும். ‘இவனெல்லாம் அரசியல் மேடைகளில் புகழ் மாலைகளைத் தேடுகிறாங்க!’ என்று அய்யா புழுங்கிக் குமைந்தார். அவன் பஞ்சாயத்து, நகராட்சி என்று தேர்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/19&oldid=1049387" இலிருந்து மீள்விக்கப்பட்டது