பக்கம்:உத்தரகாண்டம்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220   ✲   உத்தரகாண்டம்

வளைச்சி பெரிய ஆஸ்பத்திரி; கெஸ்ட் அவுஸ், அது இதுன்னு அமெரிக்காவுக்கு மேல வரப்போவுதாம். இதபாரு, கிழக்கால, குடும்பம் குடும்பமா பொழப்பத் தேடி வந்து அல்லாடுதுங்க. எதுக்கால, அங்க பழைய பங்களா ஒண்ணு இருந்திச்சே, அதை இடிக்க வந்த சனங்களப் பாத்தேன். கடப்பாறய வச்சிட்டு வெயில்ல இடிப்பானுவ. அஞ்சும் குஞ்சுமாக இடிச்சத எடுத்து அடுக்கும். காலம அரிசி பருப்பு, கறி மீனு வாங்கி வந்து அடுப்பு வச்சிப் பொங்கும். தின்னும். எண்ணெய் காணாத முடி. அழுக்கு. சாங்காலமா தண்ணி சேந்திக் குளிக்கும். ஆம்புளங்க ராத்திரி குடிச்சிப் போட்டு கட்டயா தரயில கெடப்பானுவ. ஒரு பொம்புள, பாவம், ரெண்டு புள்ள, இங்க திண்ணையில படுக்கிறேம்பா... படுத்துக்கம்பேன்... இதையும் அப்படி இடிப்பாங்க...”

இவளுக்குத் தொண்டை கம்மிப் போகிறது. “எல்லா இடத்திலும் இதே வரலாறுதாம்மா. நா இப்ப ஒரு முக்கிய விசாரணையா நேத்துதா வந்தே. வந்ததும், விசாரிச்சேன். இந்த இடம், வீதி எனக்கு நல்லா தெரியுமே? ஆனா, இந்தத் தெருவுக்கு இப்ப, மயில் ரங்கம் தெருன்னல்ல போட்டிருக்கு! புதுநகர் காலனி அதுவும் தெரியல. மணிக்கூண்டு கிட்ட விசாரிச்சேன். அங்கே மெஸ் வச்சிருக்கிற அம்மா, அட்ரசப் பாத்திட்டுச் சொன்னாங்க. அந்த வீட்டக் காட்டினாங்க. வூடு டீச்சர் வீடு, வித்திட்டாங்க. மூணு லட்சம்னு வாங்கி ரிஜிஸ்தர் ஆயிடிச்சின்னாங்க. அப்பதா அங்க டாக்டர் இருந்ததா- வயித்தியம் பண்ணுவாருன்னு பூவிக்கிற பொம்புள சொல்லிச்சி. டீச்சரத் தேடிட்டுப் போகு முன்ன, ஸ்கூல்ல விசாரிச்சேன். வாச்மேன் சொன்னான், நீங்க விசாரிக்கிற பொம்புள, இங்க நாலு மாசமா இல்ல. அவங்க, சிவசக்தி ஆசிரமம் போகணும்னு சொன்னாங்க. அப்படியே போய்த் தங்கிட்டதாக் கேள்வி. நீங்க யாருங்கன்னு கேட்டான். நான் புனாவிலேந்து வந்திருக்கிறேன். அவங்க... அண்ணன்னேன். அப்ப நீங்க வேறயா? முன்னகூட ஓரண்ணன் இப்படித்தா வந்து விசாரிச்சாரு. அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/222&oldid=1050158" இலிருந்து மீள்விக்கப்பட்டது