பக்கம்:உத்தரகாண்டம்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    21


வாணாம்மா, பூக்குழந்தை. எப்படியேனும் துக்கினால் குழந்தைக்கு வலிக்கும். கழுத்து நிற்க நாளாகல...”

“அப்ப நா உக்காந்துக்கறேன். என் மடில வையி...”

இப்போது நினைத்தாலும் தாயம்மாளின் நெஞ்சுருகிக் கண்கள் கசிகின்றன.

“இவனுக்கு ‘மோகன்தாஸ்’னு பேர் வைக்கிறேன்... மோகன்தாஸ்! மோகன்தாஸ்...”

“அய்யா! இது காந்திஜி பேரில்ல, அப்ப?”

“ஆமாம்மா. நம்ம நாட்டுக்கு சுதந்தரம் வந்து, சாதி மதம், பட்டினி, பசி, எல்லாம் ஒழிய, நிறையப் பேர் அவர் போல வளரணும். சுதந்தரம் வந்த பிறகு நாட்டை வழி நடத்த நிறையப்பேர் அவர் மாதிரி வரணும்.

“மோகன்... மோகன்... மோகன்னு கூப்பிட்டா நல்லா இருக்கும்.”

அம்மா புள்ளையை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள்.” உம்புள்ளைக்கு அய்யா காந்தி பேரை வச்சிட்டார். அவன் அமோகமா இருக்கணும் தாயம்மா!”

‘மோகன்தாசு, மோகன்தாசு, மோகன்தாசு’ என்ற அந்தப் பூஞ்செவியில் தாய் ஒலி எழுப்பினாள்.

ஐந்து மாதம் ஆனபோது, அவள் சமையல் கூடத்து மூலையில் கந்தலில் போட்டுவிட்டு வேலை செய்து கொண்டிருப்பாள்.

மோகன், மோகன்... என்று, பஞ்சமியும் சந்திரியும் கொஞ்சுவார்கள்.

‘மோகன்?’ என்று சத்தமாக ராதாம்மா கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பான். அவன் படிக்க வந்த போது, குடில் பள்ளி பெரிய குருகுலப் பள்ளியாக வளர்ந்துவிட்டது...

ஒன்பதாவது படிக்க வெளியே சென்றுவிட்டான்.

அப்போதே பேரை மாற்றிக் கொண்டுவிட்டான். அப்போது புருசன் உயிருடன் இல்லை. எந்த அடிப்படையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/23&oldid=1049396" இலிருந்து மீள்விக்கப்பட்டது