பக்கம்:உத்தரகாண்டம்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    39

ருந்தேன். இப்ப இவங்க பொழிச்சலூருக்கு மாத்திட்டாங்க. எனக்கு அங்கேந்து இத்தக் கொண்டாந்து விட்டுட்டுப் போறது கஸ்டமாத்தானிருக்கு. காலம அவங்க பைக்ல ஆபீசுக்குப் போறப்ப ஸ்கூல்ல கொண்டாந்து விட்டுடுவாங்க. இப்ப நாங் கொண்டுவிட்டுவ...”

“அப்பா எங்கே வேலை பண்ணுறாங்க?”

“அவரு சவுதிக்குப் போயிருக்காரு. கிழவிதா வூட்ல...”

“பதனமாப் போய்ச்சேரு...”

அவள் போகிறாள்.

சுதந்தரம் வந்ததும் தேனாறும் பாலாறும் ஒடும் என்று நம்பிய ஏழைகளை நினைக்கிறது மனம்.

நினைப்பில் கஞ்சிக்கான பசியும் அமுங்கிப் போகிறது.

3

பின் பக்கம் மாமரத்தடியில் சருகுக் குப்பைகள் நிறைந்திருக்கின்றன. குட்டை, குளம், புற்று எல்லாம் போன பிறகு, இந்த வீட்டைச் சுற்றி அறங்காவலர் குழு, ஒரு கம்பி வேலி போட்டிருக்கிறது. கம்பி வேலிகளில் நொச்சி, தூதுவளை, ஆடாதொடை போன்ற எல்லா மூலிகைகளும் கிடைக்கும். ஒரு பக்கம் ராதாம்மாவின் நினைவாக இன்னமும் மருதோன்றிச் செடிகள் வேலியைக் காக்கின்றன. இந்த மருதோன்றி அரைத்து வைத்த ஒரு மணியில் பற்றிவிடும். இரவு சாப்பிட்டுப் படுக்கு முன் அரைத்து வைத்து விட்டுக் காலையில் எழுந்ததும் கைகளும் கால்களும் சிவப்புப் பவழங்களைக் கோத்து ஒட்டினாற்போல் அழகு மிளிரும் அதிசயத்தைக் குழந்தைகள் அநுபவிக்கும். பைசா செலவில்லாத அழகு... இது அரைப்பதற்கே பயன்பட்ட கல்லுரல் இன்னமும் கிணற்றடியில் கிடக்கிறது.

இந்தக் காலம் எப்படி மாறிப்போயிற்று?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/41&oldid=1049427" இலிருந்து மீள்விக்கப்பட்டது