பக்கம்:உத்தரகாண்டம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    41

வெறும் பொட்டலாக இருந்த காலத்தை அவள் அறிவாள். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், இராணுவ வண்டிகள் செல்லத்தான் அந்தச் சாலை பெரியதாகப் போடப்பட்டதாக அய்யா சொல்வார். அருகில் விமான தளம், பயிற்சிக் கூடம்... என்று சூழலே மாறிற்று! இப்போதெல்லாம் அந்தப் பக்கம் செல்லவே முடியாது. அருகே இரயில் நிலையம், மிகப் பெரிதாக இறக்கை விரித்துக்கொண்டு இரு புறங்களிலும் படிகளும் தளங்களும்மாக மனித நெருக்கடிக்குச் சாட்சியாக இருக்கிறது. பேருந்து நிலையம் என்று ஒதுக்கிய இடம் பிதுங்கி எங்கே பார்த்தாலும் பேருந்துகள், கடைகள் என்று மனித - இரண்டு சக்கர, மூன்று சக்கரங்களின் போக்குவரத்து நெரிசல்கள். ஆனாலும் இந்தப் பெருவழிச்சாலை துப்புரவான, ஆரோக்கியமான வணிக வீதிகளைச் சந்திக்கும் சாலையாக இல்லை. என்னென்னமோ கடைகள். இவளுக்குத் தெரிந்ததெல்லாம் காபிக் கிளப், வெற்றிலை பாக்கு சோடாக் கடைகள், மளிகை, வீட்டு சாமான் கடைகள், துணிக்கடைகள், தையல் கடைகள்தாம். அந்த அடிப்படையே இல்லை. ஒரு கஜம் மல்துணி என்றால் துணிக்கடைக்காரருக்குத் தெரியவில்லை. இவளுக்குக் கைத்தறி முழு வெள்ளைச் சேலை கூடக் கிடைப்பதில்லை... குஞ்சிதம் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும்.

நடுச்சாலையில் கோழி உரிக்கிறான். மாட்டுச்சதையைக் கண்டம் போடுகிறான். வண்டியில் சமையல் நடக்கிறது. காலை, மதியம், இரவு உணவு வகைகள் இங்கேயே. சாலை கடந்து, ரயில் பாதையும் கடந்து ரமணி அவளைக் கூட்டிச் செல்கிறான். கிளைத் தெருவொன்றில் கடைகள் திறக்கும் நேரம். ஜமீலா மெடிகல்ஸ் என்ற பெயர் விளங்கும் சிறு கடை திறக்கவில்லை. அருகே, டாக்டர் யமுனாதேவி, குழந்தை நல, பெண்கள் மருத்துவர் என்ற பலகையும் தெரிகிறது.

அந்த சந்தில்தான் மரணம் நிகழ்ந்த வீடு என்பதை அறிவிப்பது போல் ஆட்கள் தெரிகின்றனர். சாயபுவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/43&oldid=1049429" இலிருந்து மீள்விக்கப்பட்டது