பக்கம்:உத்தரகாண்டம்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44   ✲   உத்தரகாண்டம்

இதுவும்னு நினைச்சிட்டேன். அப்ப எங்கண்ணன் ரமணா, “சீதா, நாமெல்லாம் எம்மு. சாயபுமாமா, மணிமாமால்லாம் அய்யி. ஜயி, எம்மு. எம்முதா நல்லவங்க. ஐயி கெட்டவங்க”ன்னான். ‘சீ போடா, சாயபுமாமா எப்ப வந்தாலும் என்னைக் கூட்டிட்டுப் போயி மிட்டாயும் மிக்ஸ்சரும் வாங்கித் தராங்க. அவங்க ஒண்ணும் கெட்டவங்க இல்ல!...’ன்னேன். அன்னிக்கு சாயங்காலம் சாயபு மாமா வந்தாங்க. நான் வழிமறிச்சிட்டு, “மாமா, எனக்கு ஒண்ணு தெரியணும்... நீங்க எம்தானே?”ன்னேன்.

“மாமா, சிரிச்சிட்டு, எம்முன்னா என்னம்மா?”ன்னாரு.

“எம்முன்னா நல்லவங்க, ஐயின்னா கெட்டவங்க. நீங்க நல்வங்கதானே?”

அவங்க பெரிசாச் சிரிச்சாங்க. எங்கம்மா உள்ளேந்து ஓடி வந்தாங்க.

“வாங்கண்ணே... ஏண்டி போக்கிரி? இப்பிடியா கேக்கிறது? உள்ள வாங்க. இவங்க போக்கு புடிக்கல. பிள்ளைங்ககூட இப்பிடி நினைக்கும்படியா சொல்லிக் குடுப்பாங்க? நீங்க மனசில வச்சிக்காதீங்கண்ணே”ன்னு சொன்னது எனக்கு இப்ப போல நினப்பு வருது.”

“அம்மா அண்ணங்கிட்டத்தா இருக்காங்களா?”

“இருக்காங்க. இவங்க கட்சி கிட்சி இல்லேன்னாலும், ஏழைப்பிள்ளைங்களத் தேடிட்டுப் போயி படிப்பு சொல்லிக் குடுக்கிறாங்க. பொண்ணு சம்பந்தமா போராட்டம்னு வந்திட்டா கலந்துக்குறாங்க. இதெல்லாம் ரமணா சம்சாரம் அதா அண்ணிக்குப் புடிக்கல. பனிப்போர் சமாசாரம்தான்...”

“சரிம்மா, நீ பாத்திட்டுவா... எதோ நம்ம காலத்துல மிச்சமிருந்த ஒரு தொடர்பு அதும் முடிஞ்சி போச்சி...”

எம்மு, அய்யி...

சிரிக்கும்படி இருந்தாலும், துயரம் தான் முட்டுகிறது. கிளையும், பூவும், காயும், கனியுமாகத் தாங்கிய மரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/46&oldid=1049432" இலிருந்து மீள்விக்கப்பட்டது