பக்கம்:உத்தரகாண்டம்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    51

தில் விம்மி விம்மி அழலானார். “அம்மே, நான் தூக்குக் கயிற்றில் முடிந்திருக்கலாம்... இந்த பாரத சமுதாயம், கனவு கண்ட, சமத்துவ, ஜனநாயக, அஹிம்சைச் சமுதாயம் அந்தக் கனவு துண்டுதுண்டாய் போயிட்டதம்மா...” என்று அழுதார்.

4

காலம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. ஆனால், தங்கள் கனவுகள் உடைந்து சிதறுவதைக் காண முடியாமல், அந்த நொறுங்குதலுக்குச் சாட்சிகளாக இருக்க விரும்பாமலே கண்களை மூடிவிட்டார்களே? ராமுண்ணி இறந்த போது, ஐயா இறந்து சில நாட்களே ஆகியிருந்தன. அவருக்கு வாரிசு போல் அவருடைய பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவதாக உலகுக்கு அடித்துக் கூறுவதுபோல், அந்த மரணத்தைப் படம் எடுக்கச் செய்து, விளம்பரப் படுத்தினான் பராங்குசம். சாதிமதம் தெரியாமல் அநாதையாகப் பிச்சை எடுத்த தலையெழுத்தை அழித்து, ராமகிருஷ்ணர் விடுதியில் சேர்த்து ஒழுக்கப்பிடிப்பு படிக்க வைத்தார் என்று அம்மா சொல்வார். அவளுக்குத் தெரிந்து அவன் சேவாகிராமத்தில் ஆதாரக்கல்விப் பயிற்சி பெற்று வந்தவன். சுப்பய்யா, மருதமுத்து, சுசீலா என்று தங்கள் மிக விசாலமான தோட்டத்தில் ஆங்காங்கு கூரைக் கொட்டகை போட்டு, குருகுல வித்யாலயத்தைத் துவக்கிய போது, இந்தப் பெரிய வீட்டில் பர்மா அகதிகளின் புகலிடத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்த அவள் தேனாம்பேட்டை இல்லத்துக்குப் பெயர்ந்தாள்.

சரோஜாம்மாவின் மூதாதையர் வீடு இது. பெரிய சிவப்புக் கல் தோடும், பிடிபிடியாகச் சங்கிலியும் வளையல்களும் அணிந்திருந்த பாட்டியை அவள் சிறு வயதில் பார்த்திருக்கிறாள். கண்ணமங்கலம் கிராமத்தில் அங்காயி திருவிழாவின் போது வருவார்கள். பாட்டனையும் தெரியும். பெரிய மீசையும், திறந்த மார்பில் உருத்திராட்சமுமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/53&oldid=1049465" இலிருந்து மீள்விக்கப்பட்டது