பக்கம்:உத்தரகாண்டம்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56   ✲   உத்தரகாண்டம்


அவளுக்கு அன்றைய பஜனை மிகவும் சந்தோசமாக இருந்தது. அய்யாவும், அம்மாவும், ராதாம்மாவும் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக ஈடுபட்டார்கள். அய்யாவுக்கு மிகவும் பிடித்த ‘ஹரி துமஹரோ’ பாட்டை அவர் தனியாகப் பாடினார். ஒரு இங்கிலீஷ் பாட்டும் இடம் பெற்றது. எல்லோரும் ராம்துன் பாடினார்கள். அந்தக் கூடத்தில் தொங்கிய ‘பல்ப்’ வெளிச்சம் போதவில்லை என்று நினைப்பாள். அன்று அப்படித் தோன்றவில்லை. இந்த பஜனையில் சுண்டல் கிடையாது. கர்ப்பூரம், மணி அடித்தல் எதுவுமே கிடையாது. பழங்கள் கொண்டு வருவார்கள். அதைப் பங்கிட்டு ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொள்வார்கள். ஆங்காங்கு குடிசைகளில் உள்ள பிள்ளைகள் சில சமயங்களில் வரும்... அவர் பொறி கடலை வாங்கி வைத்திருந்து கொடுப்பார்.

“அய்யாக்கு, மக்க மனுசங்க...?” என்று அவள் கேட்டாள்.

“எல்லாம் இருக்காங்க...” என்று மனம் துளும்பும் பாவத்துடன் கண்கள் மூட விடை கூறினார்.

அதற்குமேல் எங்கே இருக்காங்க, எதற்கு நீங்கள் இங்கே தனியாக இருக்கிறீங்க என்று கேட்க, தூண்டித் துருவ அவளுக்குத் தெம்பு இல்லை. அப்போதெல்லாம் கொட்டிலில் ஒரு கறவைப் பசு இருந்தது. உழக்குப்பால் எடுத்துக் கொண்டு சென்று “அய்யா, பால் கொண்டாந்திருக்கிறேன். காச்சிருக்கிறேன். காபி, டீ எதுனாலும் போடட்டுமா?” என்று கேட்டபோது அவர் சிரித்தார்.

“நான் பால், காபி எதுவும் சாப்பிடுறதில்ல. சுத்தமான தண்ணீர், அதுதான் குடிப்பேன். உங்கள் கிணற்று நீர் அம்ருதம்” என்றார்.

அவள் மலைத்தாற்போல் நின்றாள்.

“சாப்பாடுதான் வேணாம்னு தெரிவிச்சிட்டீங்க. நீங்க இங்க சமைக்கிறாப்பலவும் தெரியல. ஒரு கஞ்சி, கிஞ்சி... எங்கய்யாவுக்குக் கேழ்வரகு முளை கட்டிக்காய வச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/58&oldid=1049477" இலிருந்து மீள்விக்கப்பட்டது