பக்கம்:உத்தரகாண்டம்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70   ✲   உத்தரகாண்டம்

அந்த காலத்துல. கண்ணன், பரிமளா, ஏ, இவளுக்குக்கூட நாந்தா சின்னக்கிளாசில வீட்டுப்பாடம் சொல்லிக் குடுப்பேன். இப்ப இப்பிடி இந்தப் படிப்பு உதவாக்கரையாயிடும்னு புரியல...”

“அது சரி, நீ என்னமோ தாசில்தார் சர்ட்டிபிகேட்னியே? அது எதுக்கு?”

“நா வேலைக்கு மட்டும் கேக்கல. அவுங்க ஒரு தர்ம ஆஸ்டல் வச்சிருக்காங்க. எஸ்.கே.ஆர். அய்யா காலத்துலியே இருந்தது தானாமே அது? இவ எங்கனாலும், கிளார்க், ரிசப்ஷனிஸ்ட்னு வேல செஞ்சிக்கிட்டு அதுல தங்கிக் கலாம்ங்கறதுக்காகக் கேட்டோம். அதுக்குத்தான் இவ புருசனில்லாதவ, ஆருமில்லன்னு சர்ட்டிபிகேட் வேணும்னாங்க. என்ன எழவு சர்ட்டிபிகேட்டோ? வெவரம் புரியாம போயி நின்னோம். ஆபீசா அது? முதல்ல போரப்பவே ப்யூன் புடிச்சிக்கிறான். ‘யாரு, எதுக்கு, தாழ்த்தப்பட்ட சாதிச் சான்றிதழா? நிலமா, சொத்தா, வாரிசு உரிமையா’ன்னு கேட்டு பணம் புடுங்கறாங்க. அந்த எடத்துல எத்தினி ஆபீசர்கள் இருக்காங்கன்னு புரியல. கோவாலுன்னு எங்கூர்க்காரப் பய்யன் அங்க பாத்தான். “எங்கக்கா இங்க..?"ன்னு மணிய விசாரிச்சான். அவனுக்கு அரசியல் கட்சித் தொடர்பு. “போயி நீங்க, டெஸர்டட் வைஃப்னு போட்டு சான்றிதழ் வாங்கிடுங்க போதும்..."னு அவனே ஃபாரம் வாங்கிட்டு வந்தான். நூறு ரூபா குடுத்தாப் போதும்னான். அங்கியே எழுதி எடுத்திட்டு அவன் முன்னே போயி, அந்த ஆபீசருக்கு முன்ன எங்களையும் கூட்டிட்டு நுழைஞ்சான். அவுரு மேசையச்சுத்திப் பெரிய கூட்டம். அங்கே ஒரு ஆளப்புடிச்சி இவ, நூறு ரூபாயையும் தாளையும் குடுத்தா...

“அவன் அவரு பக்கமா நின்னிட்டிருக்கையில, ஒரு வயசான அம்மா, நிக்கிறாங்க. பின்னால ரெண்டு பேர். துண்டு போட்டவ, போடாதவன்னு ஒரெழவும் புரியல. அந்தம்மாகிட்ட, “ஏம்மா, உங்க புருசருக்கு, இன்னொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/72&oldid=1049521" இலிருந்து மீள்விக்கப்பட்டது