பக்கம்:உத்தரகாண்டம்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    77


‘ரியல்எஸ்டேட் பிஸினஸ்’ என்பது, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆட்சியாளரின் பைகளுக்குக் காசு சேர்க்கும் தொழில் என்று சாயபு சொல்வான்.

அவன் பெண்சாதியைத்தான் அன்று சாயபு மரணத்துக்குச் சென்ற அன்று பர்த்தாள். ஆனால் அவன் பின் நகையைப் பறி கொடுத்துப் பிரலாபித்துக் கொண்டு சென்ற பெண், அன்று பார்த்த அவன் மனைவியாகத் தெரியவில்லையே?...

ஒன்றும் புரியவில்லை. இதுவும்... அரசியல் கட்சித் தலைவரின் ‘அடி’யைப் பின்பற்றும் தொண்டோ? பின்பக்கம்மா பெருத்தாலும் காம்பு பழுத்து வளைந்தும் நெளிந்தும் உதிர்ந்திருக்கின்றன. சருகுகளில் நெருப்பு வைத்துப் புகை காட்டியதாலோ?... பூச்சிக்கு மருந்தடிக்க வேண்டும் என்று ரங்கனிடம்தான் சொல்ல வேண்டும். அவனுக்கு இவள் நடப்பு, போக்கு ஒன்றுமே புரியவில்லை. “இத்தே பெரிய வூட்ட சும்மா போட்டு வச்சிருக்கிறீங்க. மூவாயிரம் போல வாடகை வரும்...” என்று அடிக்கடி சொல்கிறான். அந்த வீட்டில் அவள் இருக்க உரிமை இல்லை என்பதை உணர்த்துவது போல் தோன்றுகிறது. இருக்கட்டும், இவன் யார்? நாளைக்கு இதில் ஒரு ஓட்டல், சாராயக்கடை என்று திறந்து விட்டால்? பெண்களை வைத்துச் சம்பாதிக்க ‘லாட்ஜ்’ கட்டினால்? அவள் அய்யா அம்மாவின் நிழலில் இருந்து, அவர்கள் உப்பை உட்கொண்ட நன்றிக்கு, நீசத்தனமான காரியங்களுக்கு இடம் கொடுக்கலாகாது.

ராதாம்மாவின் பையன் அமெரிக்காவில் இருப்பதாக நிகொலஸ் பையன் ஜார்ஜ், சொன்னதாக சாயபுவே சொல்லி இருக்கிறார். மருமகனும் வேலையில் இருந்து ஒய்வு பெற்று, எங்கோ இமாலயத்தில் இருப்பதாகச் சொன்னார். அவர்களில் யாரேனும் இந்த வீட்டுப் பக்கம் நிச்சயமாக வருவார்கள் என்று நம்புகிறாள். குருகுல வித்யாலயம் தொடங்கி ஐம்பது வருசம் கொண்டாடினார்கள். பெரிய விழா நடந்தது. அதற்கு ராஷ்டிரபதி வந்தார், அவர் வந்தார், இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/79&oldid=1049536" இலிருந்து மீள்விக்கப்பட்டது