பக்கம்:உத்தரகாண்டம்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78   ✲   உத்தரகாண்டம்

வந்தாரென்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இந்தப் பராங்குசம் அவளுக்கு ஓர் அழைப்பிதழ்கூட வைக்கவில்லை. அவளும் அப்போது சோகமாக இருந்தாள். பக்கத்தில், அந்த மிலிடரிக்காரத் தம்பி காம்பு ஒடிந்து சாய்ந்தாற்போல் திடுமென்று போய்விட்ட புதிசு. அவளால் ஏற்றுக் கொள்ளவே முடிந்திருக்கவில்லை... எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்தத் தோட்டத்தை எவ்வளவு அழகாக வைத்திருந்தாள்! சனி ஞாயிறு நாட்களில் அந்தப் பஞ்சாபி சிநேகிதர் சம்சாரமும், இரண்டு குழந்தைகளும் வருவார்கள். வரிசையாகப் பல நிறங்களில் பூத்திருந்த அடுக்குக்காசித்தும்பைப்பூவை அழகாக வாழை நாரில் தொடுத்து, பெண் குழந்தைக்குக் கொடுப்பார். இவள் இந்தப் பக்கத்தில் நின்று அதை அவர் தொடுக்கும் அதிசயத்தைப் பார்ப்பாள். ஒருநாள் காசித்தும்பை மலர்களை இந்த வீட்டில் படத்தின்முன் அழகாக ஒரு கிண்ணத்தில் நிரூற்றி அதில் பரப்பிக் கொண்டிருக்கையில், “ஏன் தம்பி? இந்தப் பூக்களை எப்படி நீங்க இவ்வளவு அழகாகத் தொடுக்கிறீங்க? ஜாதிமல்லி, முல்லை, அரளி எல்லாம் தொடுக்கலாம். அதுகூட முல்லையும் மல்லியும் காம்பு நீளமில்ல. இதில காம்பே தெரியாது தொடறப்பவே உதிந்து போயிடுது. அந்தப்புள்ளங்க ரெண்டு சடையிலும் வச்சிட்டிருந்தாங்க. நானே கண்ணு போடக் கூடாது. நீங்க நல்லாயிருக்கணும் தம்பி...” என்றாள் மனம் துளும்ப.

மீசையைக் கடித்துக் கொண்டு ஒரு சிரிப்பைச் சிந்தியது இப்போது போல் இருக்கிறது.

ரங்கனுக்கு அவர் ஒரு முள் போல இருந்தார்.

“அந்த ஆள் மிலிடரி இல்ல, குடிக்கிறாரு! ராத்திரி வாசப்புறம் ஈசிசேரில சாஞ்சிட்டு அவரு குடிச்சத நான் பார்த்தேன்...” என்றான் ஒருநாள். “சும்மா பழி சொல்லாத. யார் மேல வாணாலும் எதுவும் சொல்லுறதா?” என்று அவள் கடிந்தாள்.

இரவில் நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் அவர் அப்படி உட்கார்ந்திருந்த நாட்கள் உண்டு. வேலியில் மயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/80&oldid=1049539" இலிருந்து மீள்விக்கப்பட்டது