பக்கம்:உத்தரகாண்டம்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86   ✲   உத்தரகாண்டம்

னாரு ஒருநாள். அவர் கண்களில் அப்படியே தண்ணி வழிஞ்சிச்சி...” என்று கூறும்போதே கண்ணீர் தழுதழுக்க நின்றான்.

“அங்கிள் வந்தா, அவர் பேசறதக் கேட்டுக்கிட்டே இருக்கணும்னு தோணும். “டெய்ஸி, இப்ப ஒரு ஆர்க்கெஸ்ட்ரான்னா எத்தினி வாத்தியம் இருக்கு? காத்து வாத்தியம், தோல்வாத்தியம் கம்பி வாத்தியம்னு எத்தினி இருக்கு. அதெல்லாமும் சேர்ந்துதானே ‘ஹார்மனி’ உண்டாகுது? அதுபோல உலகத்து மனிசங்களெல்லாம் ஒண்ணா, குத்து வெட்டு, பகை இல்லாம, ‘ஹார்மனி’ங்கறது வராதா என்ன? இப்ப மேல் நாட்டு சங்கீதம், இந்துஸ்தானி, கர்நாடகம்னு எல்லாத்தையும் சேத்து... ஒரு தனி இசை வரல?"ம்பாரு. அத்தை எதானும் பேசி, நான் வாட்டமா இருந்தா உடனே கண்டு பிடிச்சிடுவாரு ரெண்டு பேரையும் சேத்துவச்சி... ‘ஹார்மணிம்பாரு...” என்று நிக்கொலசின் மருமகள் அழுதாள்.

‘ஹார்மனி’ என்றால் என்னவென்று பொருள் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் மனசுக்குப் புரிந்தது.

பின்னால் வாழைகள் செழித்திருந்தன. இலை அறுத்துக் கொண்டு அலமேலு செல்கையில், இவளுக்கு அந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக் குடைந்தது. அவளே புரிந்து கொண்டாற்போல், “சாயபு சாரும், சந்தானம் சாரும் வந்து, இந்த ஏற்பாட்டைச் செய்யச் சொன்னாங்க பணம் குடுத்தாங்க. எனக்குக் கூடப் பிறந்து, ஒட்டுறவெல்லாம் முள்ளுகதா. ஆனா... இப்படி ஒரு மனுசர். ஞானி. அதிர்ந்து பேசாமல் ஒரு சிரிப்பு. மீசை வச்சிண்ட மிலிடரிக்காரன், குடிப்பனோ என்னமோன்னு, ரொம்ப பயப்பட்டேன். உருத்திராட்சம் சந்தனக்கீத்தெல்லாம் போட்டுண்டு, ஒரு கடன் வரும். மருந்துக் கடைக்காரன். பார்வையே நன்னாருக்காது. கிட்டப் போனாலே அந்த வாடை வரும். அவனை வராதேன்னு சொல்ல முடியாது. ஏன்னா, அந்தக் கட்டிடத்துச் சொந்தக்காரன். குடும்பம் செங்கல்பட்டாம். ஞாயித்துக்கிழமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/88&oldid=1049552" இலிருந்து மீள்விக்கப்பட்டது