பக்கம்:உத்தரகாண்டம்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88   ✲   உத்தரகாண்டம்

இருக்குன்னு ரசம் ஊத்திக் குடுத்தப்ப, சிரிச்சாரு, பிறகு போயிட்டாரு. ராத்திரி நான் சூடா டிபன் போடும் வரை இருப்பார். எவனாலும் குடிச்சிட்டு வரான்னு தெரிஞ்சா சட்டையப் புடிச்சி இழுத்துத் தள்ளிடுவார். எனக்கு அது பெரிய பலமா இருந்தது. இப்படிப் போயிட்டாரே?...”

அந்த சந்தேகக் கரும்புள்ளிகளை அவளுடைய ஒவ்வொரு சொல்லும் அறைந்து கலைத்தன.

7

வர் போனபின் அந்தக் குடிலும், தோட்டமும் பராமரிப்பார் இல்லாமல் பாழாயின. கரையான் புற்றும் காடாய் மண்டிய செடிகளுமாக ஆயின. சில நாட்களில் அவள், அதெல்லம் சுத்தம் செய்து அவர் நினைவாக விளக்கேற்றி வைக்கலாம் என்று நினைப்பாள். வெள்ளிக்கிழமை காந்திபஜனை அவருக்குப் பின் களை கட்டவேயில்லை. பிறகு ஒருநாள் பராங்குசமே வந்தான். அவன் வந்தால் பேச்சு ரங்கனுடன்தான். அவளை முறைத்துப் பார்த்துவிட்டு மாடிக்குப் போவான். “தாயி!” என்று அதட்டலாகக் கூப்பிடுவான். ‘தாயம்மா’ கூடக் கிடையாது. “மாடிப்படியெல்லாம் சுத்தமாப் பெருக்கித் துடைக்கிறதில்ல?... வா, மாடியெல்லாம் பெருக்கித் துடை” என்பான். அவள் தெய்வமாகக் கருதிய அந்த ஆண்டைகூட அவளை அப்படி ஏவியதில்லை. அவள் முத்துதிர்க்காமல், அலமாரி, புத்தகங்கள், பத்திரிகைக்கட்டுகள் புகைப்படங்கள் எல்லாம் வைத்திருந்த அடுக்குத் தட்டுகள், எல்லாவற்றையும் தட்டிப் பெருக்குவாள். இரண்டு மணி நேரமேனும் ஆகும். அதுவரையிலும் அவன் அலமாரியைத் திறந்து காகிதங்கள், ஃபைல்கள் என்று பார்ப்பான். அவளுக்கு, ஏதோ ஓர் அரிய புதையலை அவன் களவாடிச் செல்வது போல் தோன்றும்.

அந்தத் தடவை அவனை வெகுநாட்களுக்குப் பிறகு பார்த்ததால் போலும், ஆள் மாறி இருந்தான். மினுமினுவென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/90&oldid=1049609" இலிருந்து மீள்விக்கப்பட்டது