பக்கம்:உத்திராயணம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 லா, ச. ராமாமிருதம்

பிட்டுப் போட்டுக்கறேன்.

ஆனால் திரட்டுப்பாலோடு நிக்கறதா? ருசி பார்த்தால் ஒண்ணையொண்னு துரக்கியடிக்கிறது. கூஜாவை அப்படியே வாயில் கவுத்துண்டு சட்டையிலே சிந்திப்போச்சு-புதுச் சட்டை என்ன பண்றது? மெத்தையில் நீட்டிட்டேன் சும்மா ஒரு தடவை-என்கீழ் அழுந்தி மறுபடியும் ஏந்திக் கொடுத்த சுகம் இருக்கே, மல்வி மயக்கம் வேறே கண்ணைச் செருகிடுத்து.

முழிப்பு வந்தப்போ-பாரோ முரட்டுத்தனமாத்தான் எழுப்பியிருக்கா-என்னைச் சுத்திக் கூட்டம். கண்ணைக் கசக்கிக்கறேன். ஆமாம், சாஸ்திரிகள். கலியானப் பெண் . மாப்பிள்ளை அம்மா, பின்னாலே நாலைஞ்சு பெண்டுக சிரிச் சுண்டு, குமுங்கிண்டு. அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கறது. அப்படிக் குமுர்றா. மாப்பிள்ளே அசடு வழிஞ் சிண்டு நிக்கறார். அக்கா மூஞ்சிலே ஆட்டோமெடிக் விக்னல் அத்தனையும் விளையாடறது. தலை குனிஞ் சுட்டா. இது வேறே குனியல், கலியானப் பெண்ணின் குனியல் இல்லை.

“Father bear"

    • le Gif bear”

பேபி beat; ஸம் ஒன் ஈஸ் ஸ்லிப்பிங் இன் மை பெட்!"

ஏந்திரும்மா குழந்தை!” சாஸ்திரிகள்: என்ன கனிவு:

மெத்தையில் பட்சணம் சிந்திக்கிடக்கு.

" வாடி இங்கே!' பல்லைக் கடிச்சுண்டு அம்மா என்னைக் கரகரன்னு இழுத்துண்டு போறா.

குழந்தையை ஒண்ணும் பண்ணாதேங்கோ!'

ஒண்னும் பண்ணாதேயா?" அம்மா என்னை இழுத் துண்டு போய், எனக்குத் தூக்கம் தெளியல்லே- ஒரு இரு ட்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/114&oldid=544203" இலிருந்து மீள்விக்கப்பட்டது