பக்கம்:உத்திராயணம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# I {} லா. ச. ராமாமிருதம்

இந்த மல்லிக்கும், நம் பூந்த மல்லிக்கும், மதுரை மல்லிக்கும் ஏக வித் தியாசம். வண்டு வண்டாய், பெருஞ் ஜாதி, நீல வெண்மையாய்-இதுவும் நல்ல வாசனைதான், மல்லி தான்.

அக்காவுக்கு முகம் இன்னும் ரொட்டிப் பொறுக்காய்த் தானிருக்கிறது. சளைக்கிறது. மறையறது. மறுபடியும் சளைக்கிறது.

ஓ மை டியர் யுவர் அக்கா!

கொல்லையில் மல்லிக்கொடி காடாய்ப் படர்ந் திருந்தது. ஸ்டுல் போட்டுப் பறித்தேன். நாற்காலி போட்டுப் பறித்தேன். அப்புறம் மேஜையைக் கொண்டு வந்தேன்.

கவிட்டில் ஒருத்தரும் இல்லையா?" கேட்டுக்கொண்டே அத்திம்பேர் கொல்லைப்புறம் வந்தார்.

ஹலோ பிரின்ஸஸ்!’’

என்ன அத்திம்பேர் இவ்வளவு சுருக்கு?' பெரிய தலை, எவனோ மண்டையைப் போட்டுட்டான். தகவல் வந்த மிச்ச நேரம் ஆஃப். என்ன திண்டாடறே?"

எட்டல்லே அத்திம்பேர் 1’’ கீழே இறங்கு!’’ நான் முன்றானைத் தலைப்பை ஏந்திப் பிடிக்க, அத்திம் பேர் பறித்துப் போட்டுக்கொண்டிருந்தார்.

"வீட்டில் ஒருத்தருமில்லையா? கேட்டுக்கொண்டே அக்கா கொல்லைப்புறம் வந்தாள் நீங்க எப்போ

வந்தேள்?' அத்திம்பேர் வாய்ப்பாடை ஒப்பித்தார்.

இவ்வளவு பூ எதுக்கு?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/120&oldid=544209" இலிருந்து மீள்விக்கப்பட்டது