பக்கம்:உத்திராயணம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 லா ச. ராமாமிருதம்

இப்போது சேகர் போய் வரும் இடத்தில் அவன் சம்பளத் தைப் பற்றிப் பேசுவதற்குமில்லை... புழுங்குவதற்குமில்லை. போக வர, கைசெலவு போக அவன் துணிமணிக்காவது ஆனால் சரி. அதற்குக் கூட இப்போ என்னிடம் வழியில்லை. இரண்டு வருடங்களாக wireless-க்குப் படித்து, போன வருடம் பூனாவுக்குப் போய் இரண்டு மாதங்கள் தங்கி பரீட்சை எழுதி பாஸும் பண்ணியாச்சு. Good boy செலவுதான். சரியான செலவுதான். ஒரொரு புத்தகமும் நூறு ரூபாய். நோட்புக்குகள் செலவாணி புத்தகங்களின் விலையைத் தூக்கியெறிந்தது. பூனாவுக்குப் போய்த் தங்கி அங்கு ஏதோ ஸ்பெஷல் ட்ரெய்னிங், அதற்கு மட்டும் ஒரு பெரிய நோட் எகிறிற்று. தவிர வெளியூர் போனால் ட்ரஸ் வேண்டாமா? அவன் சொல்லணுமா? எனக்கே தெரி பல்லையா? தெரிந்து என்ன செய்வது? காசுக்கு எந்த வழி. போவேன்?

எனக்கும் நல்ல நட்சத்திரம்தான். வேளை நன்றாயிருந்: தால் வேரிலும் காய்க்கும், நட்சத்திரமும் அப்போ நல்லா யிருக்கும். வேளை பொல்லாதானால் நாக்கே பாம்பாகி விடும். வேளையால் நட்சத்திரமா? நட்சத்திரத்தால் வேளையா? பூனாவிலிருந்து பையன் வந்த கையுடன் செல வோடு செலவாய்த் திருப்பதிக்கு அனுப்பி வைத்தேன். பாலாஜி குலதெய்வமல்ல. ஆனால் கொடுக்கும் தெய்வ: மாச்சே! கடைசியில் பார்க்கப் போனால் சுயநலம்தான் தெய்வம். திருவோண நட்சத்திரம் வாய் திறந்து பேசா விட்டால் போகிறது. உதட்டையாவது அசைத்தால் சரி.

விதை நெல்லை வீசி இறை. விளைச்சலை அள்ளி அறுப்பாய்.

வெறுங்கையை வீசி வயல் பரப்பைக் காட்டினால் வயிறு

நிரம்பிவிடுமா? என்றைக்கு இந்தப் பொய் எங்கள் முகத்தில் வெடிக்கப் போகிறதோ? அஸ்தியில் இதேதான் ஜூரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/132&oldid=544221" இலிருந்து மீள்விக்கப்பட்டது