பக்கம்:உத்திராயணம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 26 லா, ச. ராமாமிருதம்

டால்ஸ்டாயின் Anna Karenina; நாவல் நான் படித்த தில்லை. தலையணையாக வைத்துக்கொள்ளலாம். எழுதின வனுக்கு இருந்த தென்பு படிப்பவனுக்கு எங்கேயிருக்கிறது? தலைமுறை தலைமுறையாக தென்பு தேய்ந்துகொண்டே வருவதற்கு நான் மட்டும் விதிவிலக்கா?

egerirsi Anra Karenina Lil-iħ Linfiš Gžsir, Greta Carbo, Basie Rathbone.

அதற்குப் பல வருடங்களுக்குப்பின் இன்னொரு Anna karennina–Vivien Leigh Ralph Richardson.

tisp&5 #(5 Russ: an version

ஆனால் முதல் படத்துக்கு மிஞ்சித்தான்.

தன் மனைவியெனும் முறையில் ஒரு குழந்தைக்குத் தாயாகவும் இருப்பதில் சமுதாயத்தில் அவளுக்குள்ள பொறுப்பைப்பற்றி Annaவிடம் karenin சங்கோசத்துடன் சொல்லிக் கொள்கையில், அவளுடைய மோக வெறி பற்றி எச்சரிக்கையில், Basi Rathbone அறையைச் சுற்றி நடத்து கொண்டே ஒடிக்கும் விரல் சொடுக்குகள் இப்பவும் காதில் உதிர்கின்றன.

நான் ஊருக்குப் போய்க் குழந்தையைக் கொண்டுவந்து விட்டேன். அப்பவும் அவள் சிணுங்கவில்லை. இதுமாதிரியும் உண்டோ? உண்டு போலும்,

அன்று நான் அவளைப் பார்த்ததோடு சரி.

Karenina தன் பிள்ளையிடம் சொல்கிறான்: Sergei your mother is dead,

பாவம் சேகர் இன்னமும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். வேறு வழி? எனக்குத் தலை சுற்று கிறது. இந்தப் பச்சை மண்ணை எப்படிக் காப்பாற்றினேன்? எப்படிக் கெட்டிப்பட்டது? நானா காப்பாற்றினேன்? அந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/136&oldid=544225" இலிருந்து மீள்விக்கப்பட்டது