பக்கம்:உத்திராயணம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம ப்ரஸ்ாதம் I 37

அன்று அவனுக்கு அவர்மேல் மூண்டெழுந்த கோபா வேசத்தில், ஒடிப்போய், சமையலறையிலிருந்து அரிவாள் மனையை எடுத்து வந்து தலையைச் சீவி, கையில் பிடித்துக் கொண்டு தெருவலம் வந்து அதுமாதிரி ஒரு சேதி இரண்டு நாட்களுக்கு முன்தான் பத்திரிகையில் படித்தான்போலீஸில் சரண்-ஆனால் நினைப்போடு சரி, நாம் எல்லாம் என்ன இட்லி சாம்பார்தானே! முதலில் அவருடைய ஒரு முறைப்புக்கு அவன் காண்பானா? அது மாதிரிதான் மற்றும் ஒருமுறை அவர்களிடையே அவன் குறுக்கிடப் போய், அவர் காட்டுப் பன்றி போல் அவன்மேல் திரும்பியதும் அம்மா அலறிப் புடைத்துக்கொண்டு அவனைப் பொத்தி, அவன்மேல் விழவிருந்ததைத் தான் வாங்கிக் கொண்டு

ராமா! ராமா!

அதற்கு அடுத்த தடவை அம்மாவே அவனைக் காலை வாரிவிட்டாள். எங்கள் சண்டையில் நீ யாரடா பூர? உன் கடையைக் கட்டிண்டு போய்ச்சேர்-மத்யஸ்தத்துக்கு உன்னை அழைக்கல்லே-’’

அவ்வளவுதான். அதுவே அவனுக்கு அதிர்ச்சி. எதற்கும் மூன்று தரம் உண்டு. அத்தோடு சரி, அப்புறம் அவர்களிடை யில் புகைச்சல் காணும்போதே வீட்டைவிட்டு வெளியேறி விடுவான். அவனுக்குக் கலியாணம் ஆன மூணாம் நாள், அப்பா கிளம்பிப் போயாச்சு.

மனுஷன் குடிப்பானோ? சகவாசதோஷம் அப்படி யொன்றும் தெரியவில்லையே, சிகரெட் நெடிதான். அதுவும் எப்பவோதான்- -

அப்பா, நீ அம்மாவைப் படுத் தின பாடுக்கு, உனக்குக் கிடைக்க வேண்டியதுதான் கிடைச்சிருக்கு, எந்த மரத்தடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/147&oldid=544236" இலிருந்து மீள்விக்கப்பட்டது