பக்கம்:உத்திராயணம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம ப்ரஸ்ாதம் 罩荔9

அவர்கள் தடுமாற்றத்தை ஒழுங்குபடுத்தப் பெரியவாள் வேண்டியிருக்கிறது. அதற்கு அம்மா பற்றாது. அப்பாவின் விழி வேண்டும், அவர் கர்ஜ்ஜனை வேண்டும், அதையே ஒரு

வேளை செல்லம் விரும்புவாளோ?

இந்தப் படிப்பு, பண்பு எல்லாம் ஒரு ஸ்டேஜ்வரை தான், நம் தோலைச் சுரண்டினால் நாம் எல்லோருமே மாந்தாவிகள்தான். நான் இப்படிப் பாஷைப் படுத்தலை தான், அப்பா ஆரம்பத்திலிருந்தே செயல்படுத்தினாரோ?

ஏண்டா ஸ்ேது, ஒவ்வொருத்தரா திரும்பிண்டிருக்காப் போலிருக்கே! Black outஐக் கூட எடுத்துட்டான். நாள் ஆறது. அப்பா ஏன் இன்னும் வரல்லே?

யுத்தம்னா, நீ என்ன கத்தரிக்காய்க் கடையில் சொத்தை பொறுக்கற மாதிரின்னு நினைச்சுண்டிருக்கையா? புத்தம் சமுத்ரம்மா. யார் யார் எங்கெங்கேன்னு பிரிக்கறத் துக்கே நாளாகும்.’’

  • அப்பாவுக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோடா?”

உள் வேதனையில் அம்மாவுக்குப் புருவங்கள் நெரிகை யில், திடீரென அழகிட்டாள். அப்படி ஏதேனும் ஆக் சுன்னா தகவல் தெரிவிப்பா. தகவல் தெரியல்லேன்னா, தெரியல்லேன்னு தெரிவிப்பா நெஞ்சு முண்டை விழுங் கினான். நெஞ்சு முள் குத்திற்று. ஏண்டா கண் கலங் கறது, என்னவாவது?’ அம்மா னக, அவள் மார்க்குலையில் தவித்தது. ஒண்னுமில்லே எண்ணெய் தேச்சுண்டு நாளாச்சு... ஸ்ேது அவசரமாய்க் கழன்றுகொண்டான். இந்தப் பொய் இவ்வளவு பெரிய சுமையாயிருக்குமென்று அவன் காணவில்லை. அதைக் கடைசிவரை சாதிக்கத் தனக்குத் தகுதி இல்லையென்று உணர்ந்ததும் திகிற்புகை கால் கட்டை விரலிலிருந்து உச்சி மண்டைவரை உள்ளே பரவிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/149&oldid=544238" இலிருந்து மீள்விக்கப்பட்டது