பக்கம்:உத்திராயணம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹盛2 லா. ச. ராமாமிருதம்

அவன் நாற்காலியில் முழங்கால்களுக்கிடையே இரு கைகளையும் கோர்த்த வண்ணம், சுவரை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்.

வாசலில் கார் நிற்கும் சப்தம்.

செல்லம் அவசரமாய் மேலே ஓடிவந்தாள். உங்களை யாரோ பார்க்க வந்திருக்கா- என்று சொல்விக் கொண்டே. ஆனால் அதற்குள் அவளைத் துரத்திக்கொண்டு. மாடியேறி வரும் பூட்ஸ் கதவை அதட்டலாய்த் திறந்தது.

    • Heilo son! how are you? 6 FLtạisi ilir(5uốlabĜau?**

ஸ்ேதுவின் உடல் தானாக எழுந்தது. முகத்தில் மாறி மாறி சிவப்பு, நீலம், வெள்ளை-வாய்பிளந்து நாக்கே கூரையை முட்டிற்று. ஆனால் சத்தம் வரவில்லை. கை அவரைச் சுட்டிச் சுட்டிக் காண்பித்துத் தவித்தது.

what is the matter with you? Have you seen a ghost? Ah, இவள்தான் நாட்டுப் பெண்ணா, என்ன இந்த வயசி லேயே கிழவி ஆயிட்டையே? அவள் எங்கே? வழக்கப்ர காரமா? என்ன சொன்னாலும் அவள் திருந்தமாட் டாளே! "

ஸ்ேதுவின் கைகள் அவன் உடம்பில் எதையோ தேடித் தவித்தன. ஆ! தந்தியை உறையோடு நீட்டினான்.

உறையிலிருந்து எடுத்து அக்கண்கள் தந்தியை வெள். ளோட்டம் விட்டன.

“A mistake. These things happen; you know. 93r பேர். அதே initial. ஒரே rank-இதைச் சூடாமணி மாதிரிக் காப்பாத்தி வெச்சிருந்தையா?*

தந்தி நாலு சுக்கல்களாய் அவர் காலடியில் விழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/152&oldid=544240" இலிருந்து மீள்விக்கப்பட்டது