பக்கம்:உத்திராயணம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்துக்கள் # 57

பாட்டியிருந்தால், வியாழனுக்கு வியாழன் மாலை மூவரையும் உட்கார்த்தி வைத்து நாட்டுப்பொண்ணா நீயும் உட்கார்' கொட்டாங்கச்சியை மூணு தரம் சுத் தி குடு குடுவென்று ஓடி, மிளகாயை அடுப்பில் கொட்டுவாள். ஆனால் இங்கே காஸ் அடுப்பு. பாட்டியும் இல்லை. அம்புஜத் தால் முடிந்தது, மாலை விளக்கையேற்றினதும், உதிரி விபூதியை மூவருக்கும் இடுவாள்.

ஆனால் அவளுக்குத்தான் இந்த வயதிலேயே உடம்பு ஏகமாய்த் தடித்துவிட்டது. இரண்டு ஸிஸ்ரீயன், கருத் தடைக்குப் பின் வேறு எப்படியிருக்கும்? முன், பின் எல்லாம் எக்கண்டமாய்... தளர்ந்து சரிந்துவிட்டது.

அப்புறம் இந்தக் குழந்தைகள்-ஓ மை காட்!

மாருதி- எதிர்வீட்டு ராயர் மாமா வெச்ச பேர் அப் படியே தொற்றிக்கொண்டுவிட்டது. சஞ்சீவி மலையைத் தாங்கிக்கொண்டு கனத்தில் பறந்து வரும் ஆஞ்சநேயர் போல் அவனிடம் எப்பவும் ஒரு ஆக்ரோஷம் இருந்தது. நடையே கிடையாது, பாய்ச்சல் தான். காலடியில் எது பட்டாலும் நரேஷ் உள்பட, உதைத்துத் தள்ள வேண்டியது தான். பள்ளிக்கூடத்திலிருந்து உள்ளே நுழைந்ததும், தொட்டி முற்றத்தைப் பார்த்து வீசும் டியன் டப்பா அங்கே விழுந்தால் போச்சு. எப்படியேனும் குறி பிசகி, பாதி அந்த ரத்தில்... மூடி திறந்துவிட்டால் உள்ளேயிருக்கும் மிச்சம் மீதாரி (கண்டிப்பாய் இருக்கும்) சமயலறை பூரா சிதறி ஒரே அலமாரி தான் வேலைக்காரி, வண்ணாத்தி, ரிக்ஷாக் காரன், அலன் நிலைத்து நாலு மாதம் நிற்பதில்லை. அவங்க வீட்டிலே உடை மாத்தர மாதிரின்னா, ஆள் மாத் தறாங்க!" அதுவே ஒரு ஜோக் எல்லோரோடேயும் குஸ்தி. அண்டை வீட்டுப் பையன்களை வலுச்சண்டை சண்டையில்லாமல் இருந்தாலே அவனுக்குச் சண்டைக்கு ஒரு காரணமாய் அமையும். (மரியாதையா என்னோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/167&oldid=544255" இலிருந்து மீள்விக்கப்பட்டது