பக்கம்:உத்திராயணம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 லா, ச. ராமாமிருதம்

இந்தக் கோயிலுக்குக் காலையில் ஒரு கால பூஜை, அந்தத் தண்ணியை அவன் கொட்டிடறான். சாயங்காலம் ஏதோ கொஞ்சம் காத்தாட இங்கே ஒக்காந்துட்டு விளக்கைப் போட்டுட்டுப் போறேனே அத்தோடு சரி. அதுவுமில்லாட்டி உக்காந்து உக்காந்து மரத்துப்போன கால் விழுந்துடுமோனு, பயமாயிருக்கு விழுந்துட்டா கொள்ளுப் பேரன்மாருக்கு வந்திருக்கறவா வென்னிரடுப்புக்கு வெச்சிடுவா! அவாளைச் சொல்லிக் குத்தமில்லே! குழந்தைகள்தானே வெளியிடம் வேறு! சதையா, ரத்தமா தானாட!'

இடித்ததை உரலிலிருந்து எடுத்து இடது உள்ளங் கையில் வைத்து, வலது கையால் பிள்ளையார் பிடித்து, பிறகு பிள்ளையாரை உருண்டையாக்கினார், அந்தச் சடங்கு நேரம் பிடித்தது, அதுவரை மெளனம் உருண்டையை உள்வாயுள் வைத்துக்கொண்டார்.

'ஏன் ஊரிலிருக்கிற வியாதியெல்லாம் பிடுங்கித் தின்னாது? குருக்கள் தொடர்ந்து பொரிந்தார், 'உடம்பில் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, வயிற்றுவலி! பார்க்கத்தான் பகட்டு. மாத்திரையை பrணமா தின்னுண்டிருக்கான். ஊசி போட்டு போட்டு ரெண்டு தோளும் கையும் சல்லடைக் கண், எங்கெங்கோ வெளிநாட்டிலிருந்து வரவழைக்கிறான். ஏழை வயித்தை அடிச்சு மிச்சம் பிடிச்சால்? இப்பிடித்தான் போகும். ஆனால் இவனுக்குப் போமாட்டேன்கறதே! விழுந்து விழுந்து தவங்கிடக்கோம் அந்தச் சண்டாளியும் நம்மைக் கண்ணெடுத்துப் பாக்கறாளா? இவன் மாட்டுக் கொட்டிலைப் பெருக்கிண்டேனும் இவன்கிட்டத்தான் இருப் பேங்கறா!'

மறுபடியும் சற்று நேரம் மெளனம். சிவபுரி நெடி. சுகம் உள்ளே வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது.

அம்பி!--(இது யார்?)-போட்டுக்கற மாதிரி பிடிக்

கிறது இருக்குமோ?' '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/32&oldid=544121" இலிருந்து மீள்விக்கப்பட்டது