பக்கம்:உத்திராயணம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密莎 லர் ச. ராமாமிருதம்

சரி ஒண்னு செய் போறப்போ என் கிட்ட சொல்லிக் கிட்டுப் போவணும்.'

பம்-ம்-ம்’-சற்று யோசித்து சரி அதில் உனக்கென்ன லாபம்? கேக்கப்போனால் முன்கூட்டித் தெரிஞ்சால் கஷ்ட மாயிருக்குமே:

"அதைவிடு, போறப்போ சொல்லிட்டுப் போற மரியாதை கிடையாதா?’’

  • அதுவும் சரி, அப்படியே ஆகட்டும். உன் பெண்டாட்டி குரல் கேக்குது. முதுகு காட்டாமல் பின்பக்கமாகவே ஒடி அரிசிப் பானைக்குள் புகுந்துகொண்டாள்.

"அவ்வளவுதாம்பா, கூனப்ப முதலிக்கு திடீர்னு செல்வம் அப்படி எப்படிக் கொழிச்சுது என்னைக் கேட் காதே. யாரைக் கேட்டாலும் சொல்லமுடியாது. வீட்டில் ஈசானிய மூலையில் புதையல் கிடைச்சுதா? அலாவுதீன் பூதம் கொண்டுவந்து கொடுத்ததா? யாரேனும் உறவு ஆஸ்தியை எளுதி வெச்சுட்டு மண்டையைப் போட்டானா? அவன் நெய்த துணிக்குத் திடீர்னு மவுசு வந்துடுத்தா?

அத்தனையும் கேள்விகள்தான். அத்தனைக்கும் பதில்கள் உண்டு. ஆனால் நமக்குத் தெரியாது. நமக்குப் புரியாது. அது கூனப்ப முதலிக்கே தெரியாது புரியாது,' " எல்லாவற்றையும் மீறி எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் ஒண்னு உண்டு. கொடுக்கிற தெய்வம்

கரையைப் பிய்ச்சுண்டு கொடுக்கும்’ என்று நான் முடித்தேன்.

ஆ! அதுதான் அது இரண்டே வருஷத்தில் குடிசை மறைஞ்சு கட்டடம் எழும்பிடுத்து.'

கடினப்பன் இரண்டு பிள்ளையார் கோவில் கோபுரத்தைப் புதுப்பிச்சுக் கும்பாபிஷேகம் கடத்தி இந்தக் கட்டளையை ஏற்படுத்தினான். மூணு ரூபாயில் அப்போ வாண வேடிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/40&oldid=544129" இலிருந்து மீள்விக்கப்பட்டது