பக்கம்:உத்திராயணம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்த வேதி 41

எடுத்து மீட்டி, பட்டைகளில் விரலை யோட்டும்பொழுது அக் கை விசேஷத்தில், ஸ்வர ஜாதிகள் புதுப்புது விதமாய்க் கூடி, புதுப்புது நாதங்கள் பிறக்கும்.

அவள் போக்கின்படி நான் விட்டு அவளிடமிருந்து வரும் நாதங்களைக் கேட்டு இன்புறுவேன். -

ஆனால் அதேமாதிரி ஏன் என்னை என் இஷ்டப்படி விடுவதில்லை. அறுபது நாழியும் வீட்டுக்குள்ளேயே எப்படி உங்களால் உட்கார்ந்திருக்க முடிகிறது? ஐயோ. முகமெல் லாம் வெளுத்துக் கண்னெல்லாம், வரவர உள்ளே போகின்றதே!

ஏன் சும்மா எங்கேயோ பார்க்கறேள்? என்னத்தைத் தேடறேள்? ஆம், நான் எதைத் தேடுகிறேன்?

岑 率 幸

வானம் அமைதியாயிருக்கின்றது. என்னென்ன சப்தங் களோ, ஆகாய வெளியில் நீந்துகின்றன. ஆனால் வானம் மாத்திரம், வாயை மூடிக்கொண்டிருக்கிறது.

பிறகு

ஒரு நாளிரவு, வானம் இருண்டு, இன்னும் குமுறுகிறது. சந்திரன் எங்கோ ஒடி ஒளிந்துவிடுகிறான்.

  • பிசுபிசு'வென்று ஒன்றிரண்டு தூறல்-பிறகு மழை ஜோ வென்று ஊற்றும். மழை-காற்று-புயல்*சொடேர்-சொடே ரென்று மின்னல்-எங்கேயோ மொள மொள'வென்று , ஒரு மரம் முறிகிறது-மின்னல் வானத்தை வெட்டும்பொழுதெல்லாம், வானம் அடிபட்ட விலங்கு போல் அலறியது.

இயற்கை வெறி.

” ? ! ب;LIT-a- نی ، ،

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/51&oldid=544140" இலிருந்து மீள்விக்கப்பட்டது