பக்கம்:உத்திராயணம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வா. ச. ராமாமிருதம்

ஐயோ, இதென்ன கூத்து மின்னல் கண்ணைப் பறிக்கிறது. ஜன்னலண்டை போய் நிற்கிறேளே -குழந் தைக்குத் தூக்கித் தூக்கிப் போடுகிறது-ஐயோ, கதவை மூடுங்களேன்! எனக்குப் பயமாயிருக்கே!

சீ, ஆயிரம் படித்தால் என்ன, பெண் புத் தி பின் புத்தி தான்-இவ்விடியில் நாசக்கூடத்தின் டமருக ஒலி எனக்கு மாத்திரம் கேட்டு அவளுக்கு ஏன் கேட்கவில்லை? சப்த சோதனையின் மஹாபோதையைப் பற்றி அவள் என்ன கண்டாள்?

ஆம், இவள் வரவர என்னை ஒதுக்குகிறாள்-முன் போல் புதுப்புடவையின் மடிப்போசையுடன் வளைகள் குலுங்க மாடிக்கு ஓடி வருவதில்லை. நிச்சிந்தையான அவள் சிரிப்பு வீட்டில் ஒலித்து எத்தனையோ நாளாகிறது. நான் மாடியில் இருந்தால் அவள் கீழிருக்கிறாள். நான் கீழேயிருந் தால் அவள் மாடியிலிருக்கிறாள். குழந்தையைச் சாக்கிட்டு அவள் வேறு அறைக்கும் மாற்றிக்கொண்டு விட்டாள்.

மலர்ந்த மொக்கு வாயுடன் குழந்தை அறைக் கண் மூடியபடி தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். நான் பக்கத்தில் போய் நின்று, குனிந்தேன். அவன் விழித்துக் கொண்டு சிறு கைகளை நீட்டி, என் மோவாய்க்கட்டையை எட்டிப் பிடித்து, கிளுக்’ என்று சிரித்தான்.

குழந்தைகளின் ஸ்பரிசமோ, குரலோசையோ பட்ட மாத்திரத்தில் உடல் புளகிக்கிறது. ஸ்ஹிக்க முடியாத ஆனந்தத்தில், மயிர் கூச்செறிகிறது. அச்சமயம் உடம்பில் பரபரக்கும் வெறியில் என்ன செய்கிறோம் என்பதும் தெரிய வில்லை. அக் குழந்தை கெக்கரிப்பைக் கேட்டதும் உடைப் பெடுத்து ஆசைப்பெருக்கில், அவனை அப்படியே வாரி, உடலோடு சேர அணைத்துக்கொண்டேன். வரண்ட பூமி உறிஞ்சிய தண்ணிரைப் போன்றிருந்தது என் தாபத்தின் தவிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/52&oldid=544141" இலிருந்து மீள்விக்கப்பட்டது