பக்கம்:உத்திராயணம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலி ஆடு கீ9

தனமாய்க் கொக்கரித்தாள். அவளுக்கு எவ்வளவுக்கெவ் வளவு ஆனந்தம் பொங்கிற்றோ, அவ்வளவுக்கவ்வளவு அவன் முகத்தில் விகாரம் அதிகரித்தது. திரும்பித் திரும்பி தன் பிடரியையும் முகவாய்க் கட்டையையும் பரபரவென்று தேய்த்து திண்டாடிக் கொண்டிருந்தான். இரண்டொரு நிமிஷம் கழிந்தது. அவள் நன்றாகக் கட்டானை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று கையை உதறிக் கொண்டு தலையைத் திருப்பித் திருப்பி ஆட்டிச் சிரித்தாள்.

என்னா...?’ என்று அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டான். தலையை ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டு வெயிலில் கூசுவதுபோல, கண்களை இடுக்கிக் கொண்டு வாயை ஒரு பக்கமாய்க் கோணிக் கோண்டு, அவன் கேட்கும்போதே, அவன் மட்டித்தனம் வெட்ட வெளிச்ச மாய்த் தெரிந்தது.

என்னாவா? இன்னுங் கூட சமாளிச்சுக்கலாம்: வழி யிருக்கு நகத்தரத்துக்கு வழியிருக்கு' என்றாள்.

நகர்த்துவதற்கு வழியா? ஆட்டத்தை ஜெயிப்பதற்கு வழியா? மறுபடியும் தலையைக் கவிழ்ந்து கவனித்துப் பார்த்தும், அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

நகத்தரத்துக்கும் இடம் இருக்குன்னா சொல்றே?’’ என்று சர்வ சாதாரணமாய் அலகசியமாய்க் கேட்பதுபோல் கேட்டான்.

ஆமா..."

மெய்யாவா? '

உனக்குத் தெரியல்லே?’ என்றாள் அவள் ஆச்சரியத் துடன் இை தெரியுது... , சும்மக் கேட்டேன்...' என்று அவசரமாய்ப் பதிலளித்துவிட்டு, முகத்தை ஒரு பக்கமாய்த் திருப்பிக்கொண்டு. ஆட்டத்தின்மேல் ஊக்கமாய் இருப்பது போல் பாசாங்கு பண்ணினான்.

به سمت ه سه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/59&oldid=544148" இலிருந்து மீள்விக்கப்பட்டது