பக்கம்:உத்திராயணம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎4 லா, ச. ராமாமிருதம்

வாயிலும் மூக்கிலும் ரத்தம். கீழ் உதடு அப்படியே அறுந்து விட்டாற்போல் தொங்கிற்று. மார்புத் துணி விலகி. பரிதாபம் அவன் கை ஏர் பிடித்த கையல்லவா?

தான் இன்னது செய்தாளென்று அவளுக்கே தெரிய வில்லை. ஆத்திரத்தால் இழுக்கப்பட்டதுபோல், அவள் கை உயிரற்று, புலியை நகர்த்திக் காண்பித்தது.

ஆஹா!'

அவன் சந்தோஷமும், அவன் குரலும், அவன் புன்னகை யும் ஸ்வாபமாகவேயில்லை. கண்களில் வெறி அதிக மாயிற்று,

நாலு ஆடுகளை வெட்டினான்.

ஆ! பாத்தையா, இனிமேல் ஆட்டம் என்னுடையது தான், பாத்தையா?*

ஒரு வினாடி திக்பிரமை கொண்ட அவள் கண்கள், அவன் கண்களைச் சந்தித்தன. அவள் மூச்சு அப்படியே, ஒரே இழுப்பாய் கேவிக்கொண்டே போயிற்று. அவ்வளவு தான். முந்தானையை வாயின்மேல் போட்டுக்கொண்டு பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு சமையற் கட்டிற்கு ஓடினாள்:

அவனோ பித்துப் பிடித்தவன்போல், அங்கேயே உட் கார்ந்துகொண்டு இனிமே ஆட்டம் என்னோடதுதான், ஆட்டம் என்னோடதுதான்!” என்று திருப்பித் திருப்பி அர்த்தமில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான்,

ஆம், ஆட்டத்தை ஜெயித்துவிட்டான்! ஆனால், அவளை...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/64&oldid=544153" இலிருந்து மீள்விக்கப்பட்டது