பக்கம்:உத்திராயணம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ்வாலை

கீழ்க்கண்ட எழுத்துப் பிரதி, ஏதோ இன்னதென்று சொல்ல முடியாத மனோவியாதியாலோ, தேக வியாதி யினாலோ பீடிக்கப்பட்ட இறந்த ஒரு குடும்ப ஸ்திரீயின் தலையணையின் கீழிருந்து கண்டெடுக்கப்பட்டது:

சித்திரை 2: ஆய்விட்டது இங்கு வந்து பதினைந்து நாட்களுக்குமேல், ஒரு சுகமும் காணோம். எங்கேயோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியிருக்கிறது. எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. ஆகையினால்தான் எதையாவது எழுதியாவது பொழுதைத் தொலைக்கா மென்று எழுத ஆரம்பித்திருக்கிறேன்:

என்னத்தைப் பற்றி எழுதறது என்றுதான் தெரிய வில்லை, முதலில் எழுதறதுக்கு என்ன இருக்கு? ஒன்று குடி யிருக்கும் இடம் சுவாரஸ்யமாய் இருக்கவேண்டும், இல்லா விட்டால் மனு ஷாளாவது சுவாரஸ்யமாய் இருக்கவேண்டும். இரண்டுமில்லை. இடம் என்னவோ பாக்கறத்துக்கு லக்ஷணமா, தன்னந்தனியா, பங்களா மாதிரி இருக்கே யொழிய, மருந்துக்குக் கூட ஒரு மாமரம் கிடையாது. எங்கே பார்த்தாலும் ஒரே புளியந்தோப்பாயிருக்கு. இது கந்தக பூமியாம். வெயில் தாங்க முடியல்லே. ஒரே அனல் காற்று. மத்தியானம், சரியா உச்சி வேளைக்குத் தலையை கிர்’ ரென்று சுற்றுகிறது. நல்ல நாளிலேயே சொல்ல வேண்டிய தில்லை. அதுவும்.இங்கே வந்த பதினைஞ்சு நாளைக்குள்ளே உருக்குலைஞ்சுடுத்து. எனக்கே நன்னாத் தெரியறது...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/65&oldid=544154" இலிருந்து மீள்விக்கப்பட்டது