பக்கம்:உத்திராயணம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ்வாலை 6 :

உடனே கையை விட்டுவிட்டு, திடீர்ன்னு கையை நீட்டி. கழுத்தை வளைச்சுப் பிடிச்சு இழுத்து வாயிலே ஒரு முத்தம் குடுத்துட்டு, மின்னலா மறைஞ்சுட்டான். அப்படியே, பழுக்கப் பழுக்க நெருப்பை வாயிலே வெச்சமாதிரி இருந்தது: மூர்ச்சை போட்டமாதிரி ஆயிடுத்து,

எப்படியோ சமாளிச்சுண்டு உள்ளே போனேன். பலக யேப் போட்டுண்டு அவர் சாப்பட்றத்துக்கு ஒக்காந்துண் டிருந்தார். அவர் கூட என்னிக்கும் ஒண்ணும் கேக்காதவர், என் மூஞ்சியேப் பாத்துட்டு என்ன உடம்பு உனக்கு?’ என்னு கேட்டுட்டார்.

ஒண்ணுமில்லே’’ண்னு ஏதோ சொல்லிப்புட்டேன். வரவர, ஏற்கனவே உடம்பு பூஞ்சையொன்னோ, ஒண்னுமே தாங்கர தில்லே.

ஐயையோ, நான் என்னத்தே பண்ணுவேன், இவர் கூட என்னை இன்னும் சரியாத் தொட்டதில்லே, இந்தப் பேர் ஊர் தெரியாதவன் இவன் என்னை இப்படிப் பண்ணிட் டானே!

அதுக்குத் தகுந்தமாதிரி, என் மனவிலேயும் ஒரு தனித் தாண்டவம் ஆட்றதே! நாளைக்கு வா'ன்னுகூட அவனுக்கு இடத்தேக் குடுத்துரட்டேனே!

சித்திரை 14: அம்மா! நான் என்னத்தே சொல்லப் போறேன்? நான் நேத்திக்கிருந்த மனஸ் சந்தோஷமென்ன, இப்போ இருக்கிறது என்ன? படுத்த படுக்கையாய் இருக்கேன், தலையிலே ஐஸ் வெச்சிருக்கு! அம்மாடி, என்னைத் தேவிகூட கைவிட்டுட்டாளே! நான் என்ன செய் வேன்! தெய்வத் துணையே இல்லாட்டா நான் எங்கே போவேன்?

நேத்திக்கி எவ்வளவோ என் மனஸிலே வளைச்சு வளைச்சு புத்தி சொல்லிண்டுங்கூட, சரியா அவன் சொன்ன வேளைக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயே ஜன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/71&oldid=544160" இலிருந்து மீள்விக்கப்பட்டது