பக்கம்:உத்திராயணம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 5 வா, ச. ராமாமிருதம்

வேலை கிடைத்தால்தானே கூலி? எனக்கென்ன வேலை தெரியும்? எடுபிடி சுமை தூக்கலாம். முன்னாலே எவன் என்னை வெச்சுக்குவான்?

நான் முழுத் திருட்ா? ஆத்தாளே அறியும், வெய்யிலில் வாசவில் ஏதேனும் தின்ற பண்டம் முறத்தில் வெச்சிருந்தா அதான் உளுத்த நாத்தம் வவுத்தைக் குமட்டுதே பசிக் கொடுமை ஒரு அள்ளு வாயில் போட்டுக்கிட்டு ஒடுவேன் அம்புட்டுத்தான். இல்லே எந்த வீட்டு பொம்புள்ளை யானும் அவள் அவசரத்துக்குக் கடையில் ஏதாச்சும் வாங்கி வரச் சொன்னா... ஒரு பச்சைமிளகா, கறிவேப்பிலை, கொத்த ஒல்வி, தேங்காபத்தே அந்தச் சில்லரையோடு கம்பி நீட்டறது உண்டுதான். ஆனால் அந்த அதிஸ்டம் தினமே கைகூடுமா? தினமே நேர்ந்தால் அது எப்படி அதிஸ்டமாவும்?

பூ மலந்தாப்போல், காலும் கையும் தளற விரிச்சுப் போட்டு வாய் லேசாத் துறந்து, கண்ணை மூடி, காத்தை மெல்ல மெல்ல அருந்திக் கைகளுவிட்டு-என்ன பேத்தறேன், காத்தைத் துன்னத் தெரிஞ்சா என்னாத்துக்குக் கை களு வனும்? வாயைக் கூடக் கொப்புளிக்க வேணாம். அப்புறம் மூட்டையென்ன முடிச்சென்ன? கையையும் காலையும் வீசி நடந்துகிட்டேயிருக்க வேண்டியதுதான். சிரிப்பு வந்தது.

கிழித்த நாராய்க் கிடந்தான் தலைமாட்டில் ஏதோ சல சல-என்னவாச்சும் இருக்கலாம், என்னவாச்சும் இருந் துட்டுப் போவட்டும். இப்போ அங்கம் கொஞ்சம் அசைஞ் சாலும், இந்தச் சொகம் கலைஞ்சு போயிடும்.

புல் ஒன்றைப் பிடுங்கிக் கடித்தான். தித்திப்பு. உரு வினால் ஒரு முழ உசரம் நிக்கிதே!

புல்லின் சாறு தாகத்தை நினைப்பூட்டிற்று.

தண்ணிரில் இறங்கிக் குனிந்து, இருகைகளிலும் அள்ளி யும் ஆச்சு. எங்கோ தொலைதுாரத்திலிருந்து நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு சப்தத்தை அதன் நுட்ப நிலையிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/76&oldid=544165" இலிருந்து மீள்விக்கப்பட்டது