பக்கம்:உத்திராயணம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vi



தான் குனிய முடிவதில்லை. பிறரின் பக்குவ நிலையும் விதிப் பயனும் வெவ்வேறுபடுவதால் அவர்களாலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. கடவுள் தன்மையென்பதே இதுதானோ?

தன் சோதனைகளுக்கு மேலோங்கி, ஆலமரத்தின் தன்னந் தனியன் யமனே அணுக அஞ்சும்: தேவரும் வணங்கும் தவத்தினன். ஆனால் பிதாகமரின் அந்திய காலம் அவல காலம். சொன்ன பேச்சைக் கேளாத பேரன்மார்கள். நியாயம் இருக்குமிடம் தெரிந்தும், தான் எடுத்துச் சொன்னால் செல்லாது என்கிற தலைகுனிவில், அடைத்துப்போன வாய். கடைசிப் போரில், கிழட்டுச் சிங்கத்தின் வீரத்துக்கு, பாண்டவர் உள்பட யாருமே எதிர்கிற்க முடியவில்லை, ஆனால் அத்தனை செளரியமும் என்னவாயிற்று? ஒரு பேடியின் கணையால் சரப்படுக்கையில் வீழ்ந்ததுதான் கண்ட மிச்சம், இதற்கு விளக்கங்கள், புதைந்த பொருள்கள், ஆயிரம் உண்மைகள்-அத்தனையும் வேறு தடம். ஆனால் நாம் மனிதர், நம் திகைப்பு; பீஷ்மனின் கதியே இப்படியென்றால் நாம் எந்த மூலை? இந்தத் திகைப்பு ஒய்ந்தபாடில்லை. ஏனெனில் பாரத யுத்தம் ஓயவில்லை. நாம் இன்னும் குருக்ஷேத்திரத்தில்தான் இருக்கிறோம். காங்கேயர்கள் வீழ்ந்தவர்கள் வீழ்ந்தபடி சரப்படுக்கை அன்று விரித்தது இன்னும் விரித்தபடி வாழ்க்கையின் லக்ஷியம், நடப்பு, முடிவு எல்லாமே சரப்படுக்கையில்தானோ? இந்தக் கேள்வி திரும்பத் திரும்பத் தன் கடையலில் இதுவே ஒரு நியாயமாக ஸ்தாபனமாகிறார்போல் தோன்றுகிறது.

அகிலா. உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் நெய்த கதை என் நெசவுகூட சொல்லும்படியாக இல்லை. யதார்த்தத்தின் விபரீதம், கொடுமை, மண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/8&oldid=1143382" இலிருந்து மீள்விக்கப்பட்டது