பக்கம்:உத்திராயணம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vii



மையினின்று அதன் காவிய சோகத்தைப் பிரிப்பதற்கு, என் கலையின் உரிமையில் சம்பவங்களின் முன்பின்னைச் சற்று மாற்றியிருக்கிறேன். மற்றபடி பெயர்கள் உள்பட அப்பட்டம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

எழுத்தைச் சாதகம் செய்துகொண்டிருப்பதில், எனக்குக் கிடைத்த பெரும் பேறு, மனித மாண்பை அதன் தருணங்களில் அவ்வப்போது தரிசனம் காண்பதுதான். இது விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்.

புண்ய காலம் என்று ஒன்று தனியாக உண்டா என்ன? இவைகளைப்பற்றி எனக்குச் சொல்லக் கிடைக்கிறதே, சொல்வதில் ஒரு ஸ்னான துல்லியம் ஏற்படுகிறதே. இதுதான்.

புண்ணிய காலங்கள் நேர்ந்துகொண்டே இருக்கவேணும்.

லா. ச. ராமாமிருதம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/9&oldid=1143384" இலிருந்து மீள்விக்கப்பட்டது