பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா விசையின்றி செயல்படும் போது, உள்ளே போய்விட, தேவையான உயிர்க் காற்று போதிய அளவு இல்லாமல் போய் விடுவதால் மூச்சுத் திணறல், மூச்சு முட்டல் ஏற்படுகிறது. இவ்வாறு நுரையீரலின் பாதிப் புத் தன்மையால்தான், நுண்மையான ஆஸ்த்மாவாக மாறி விடுகிறது. இந்நோய் ஆரம்பத்திற்கு, ᏞᎫ © காரணங்கள் மருத்துவர்கள் கூறுவார்கள். அவற்றை இனிக் காண்போம். 1. மனப் பிரச்சினைகளை நாம் முதலாவது காரணமாகக் கூறலாம். அன்றாட வாழ்க்கைப் பிரச்சினை களில் அடிக்கடி ஏற்படுகின்ற ஏமாற்றங்கள், ஏக்கங்கள், கவலைகள், இழப்புகள், தோல்விகள், உணர்வுகளைச் சாரும் உறுத்தல்கள் எல்லாம் உடலில் பலப் பல மாற்றங்களை ஏற்படுத்தி, வலுவிழக்கச் செய்கின்றன. இதனால் சுவாசம் பாதிக்கப்படுகிறது. 2. உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவு வகைகள், வீட்டிலும் வீதியிலும் கிளம்பி வேதனைப் படுத்தும் தூசுகள், பொடிகள், நெடிகள், துர்நாற்றங்கள், போன்ற வேண்டாத வாசனைகளும் அலர்ஜியாக மாறி உடலைப் பாதிக்கின்றன. 3. அடிக்கடி மூக்கொழுகுதல், கண்ணெரிச்சல் கண் சிவந்து வலி ஏற்படுதல் போன்றவற்றால் ஜூரம் ஏற்படு வது உண்டு. அதனை Hay Fever என்று அழைப்பார்கள். அந்த ஜூரத்தின் காரணமாகவும் ஆஸ்த்மா ஏற்பட ஏதுவாகிறது.