இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||————————2
மயக்க மூட்டும்
மஹா செளந்தர்ய வீச்சுள்ள
'இரண்டே இரண்டு’
மூர்த்திகளில்
அதுவும் ஒன்று!
"மூக்கு நுனியிலே மட்டும்
துளி உடைஞ்சு இல்லேன்னா
எட்டு ரூபாய்க்குக் குறைஞ்சி
இதை நம்பகிட்ட
அவன் வித்திருக்கமாட்டான்!” என்றார்
என்னோடு வந்த
நண்பர்!
கடைக்காரன் பிசிறியதையும்,
நான் மூக்குநுனி மூளிபட்டிருப்பதை
"பேர தந்திர”மாகச்
சுட்டிக் காட்டியதையும்,
அதனால் - அதற்கு அவன்கேட்ட
'எட்டு' எப்படியோ
'இரண்டுக்குச் சமைந்ததையும்,
நாங்கள் வீடு திரும்பும் வரை
புகழ்ந்து கொண்டே வந்தார்!
நண்பர்!
மறுநாள் என்னிடம்
அவர் வாங்கச் சொல்லி இருந்த
‘கைமாத்து’ இருநூறுக்கு